”செல்போன் ஸ்பீக்கர் கட்டுப்பாடு” : அரசு பேருந்துகளில் நடவடிக்கை : ஓட்டுநர்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள்...!

அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு இடையூறாக அதிக சத்தத்துடன் பாடல் கேடப்து , காணொளிகளை கேட்பது ஆகியவற்றிற்கு போக்குவரத்து துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
Cellphone speaker control: Action in government buses
Cellphone speaker control: Action in government busesgoogle
1 min read

அரசுபேருந்து , செல்போன் ஸ்பீக்கர் பயன்பாட்டிற்கு தடை

அரசுப் பேருந்துகளில் பயணிகளின் அமைதியான பயணத்தை உறுதி செய்யும் வகையில், கைபேசி ஸ்பீக்கர் பயன்பாடு, அதிகமான சத்தத்தில் பாடல் ஒலிபரப்பு உள்ளிட்டவற்றுக்கு புதிய கட்டுப்பாடுகளை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் மெட்ரோ ரயில்களில் இந்த கட்டுப்பாடானது விதிக்கப்பட்டுள்ளது

பயணிகளிடம் எழுந்த புகார், போக்குவரத்து துறை நடவடிக்கை

சமீப காலமாக அரசுப் பேருந்துகளில் சில பயணிகள் கைபேசி ஸ்பீக்கரை பயன்படுத்தி அதிக சத்தத்தில் பேசுவது, பாடல்கள் கேட்பது, காணொளிகள் பார்ப்பது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதனால் முதியவர்கள், மாணவர்கள், பெண்கள், நோயாளிகள் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்ததாக புகார்கள் எழுந்த நிலையில்

புதிய நடைமுறை கட்டுப்பாட்டை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

போக்குவரத்துறையின் புதிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,அதன்படி போக்குவரத்து துறை அறிவித்துள்ள புதிய கட்டுப்பாட்டின் படி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது கைபேசியில் பேசுவதற்கோ, காணொளி பார்ப்பதற்கோ அல்லது

அதிக சத்தத்துடன் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை

பாடல்கள் கேட்பதற்கோ அதிக சத்தத்துடம் ஸ்பீக்கரை பயன்படுத்தக் கூடாது என்றும் மாறாக இயர்ஃபோன் கருவி அல்லது ஹெட்ஃபோன் கருவியை பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஓட்டுநர்களுக்கும் புதிய அறிவுறுத்தல்

பேருந்தில் பயணிக்கும் பயணிகள் மட்டுமல்லாது, ஓட்டுநர்களுக்கும் பேருந்தை இயக்கும் போது அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிக்க விடக்கூடாது என்றும் பயணிகளின் பாதுக்காப்பில் மட்டும் கவனன் செலுத்தி பேருந்தை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

பேருந்துகளில் விழிபுணர்வு ஏற்படுத்தப்படும் ; போக்குவரத்து துறை

இந்த புதிய விதிமுறைகள் குறித்து அனைத்து பயணிகளும் அறிந்து கொள்ளும் வகையில், அரசுப் பேருந்துகளின் உள்ளே தெளிவாக தெரியும் இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் , விரைவில் அமைக்கப்பர உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பு பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

=============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in