Karur Case : தவெகவின் நிலைமை இதுதானா? வருத்தம் தெரிவித்த நீதிபதி!

Karur Stampede : தவெக கரூரில் நடத்திய பிரச்சாரத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
Chennai High Court Judge Senthil Kumar Regret on Karur Stampede Death in TVK Vijay Campaign Rally
Chennai High Court Judge Senthil Kumar Regret on Karur Stampede Death in TVK Vijay Campaign Rally
1 min read

பொதுநல வழக்கு தொடுப்பு :

Chennai High Court Judge on Karur Stampede Death : தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதிருப்தியில் நீதிபதி :

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன் விசாரணைக்கு(Judge Senthil Kumar on Karur Stampede) வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிபதி செந்தில் குமார், தவெகவையும், அக்கட்சியின் தலைவர் விஜய் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி செந்தில் குமார், “விஜய் பிரச்சார வாகனத்தில் மோதி இருசக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளானது. இந்த விவகாரத்தில் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா, ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. புகார் இல்லை என்றாலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

நீதிபதி கண்டனம் :

வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் ஏதேனும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள். நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் மற்றும் அரசு அமைதியாக இருக்க கூடாது. கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster in Karur)நிகழ்ந்துள்ளது என்றும் என்ன மாதிரியான கட்சி இது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெக கட்சிக்கு என்ன தடையாக இருந்தது, ஏற்பாட்டாளர்கள், தலைவர், தொண்டர்களை, ரசிகர்களை, மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவ பண்பே இல்லை. மக்களை, குழந்தைகளை மீட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் சம்பவத்துக்கு பொறுப்பேற்காத த.வெ.க.வின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் படிக்க : அஸ்ரா கார்க் தலைமையில் SIT : விஜய்க்கு கண்டனம் : சென்னை HC அதிரடி

கட்சிகள் வருத்தம்

இந்த நிகழ்வு நடந்த பின் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்து, அனைத்து கட்சிகளும் மீட்பு பணியில் இருந்த பொழுது, நிகழ்வை ஏற்பாடு செய்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள்” என நீதிபதி செந்தில்குமார் வருத்தம்(HC Judge Senthil Kumar on Karur Incident) தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in