வெற்றிகரமாக பணியை முடித்த சேர்வராயன் இயந்திரம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் சேர்வராயன் என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து, தற்போது மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்துள்ளது
மெட்ரோ இரண்டாம் கட்ட வழித்தடம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
2 ம் கட்ட வழித்தடம் பணி நிறைவு
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது
வெற்றிக்கரமாக பணியை முடித்த சுரங்கம் தோண்டும் இயந்திரம்
இந்த வழித்தட பணிக்காக மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், 'சேர்வராயன்' என்று பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம்,
மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான (கீழ் வழித்தடம் - Down line) பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி இருந்த நிலையில் தற்போது மொத்தம் 824.6 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.
இது TU01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒன்பதாவது சுரங்கம் பணி ஆகும்
23 சுரங்கம் இயந்திரம் ;வெற்றிகரமாக பணி நிறைவு
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2-ல் இதுவரை 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை முடித்து இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது இந்தத் திட்டத்தின் TU-01 ஒப்பந்தப் பிரிவின் கீழ் உள்ள மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் மூலக்கடைக்கு இடையேயான சுரங்கப்பாதை பகுதி, பல்வேறு பெரும் சவால்கள் நிறைந்த மிகக் கடினமான ஒரு பகுதியாகும்.
உதாரணமாக, சேர்வாரயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பக்கிங்காம் கால்வாய்க்கு அடியிலும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு அடியிலும், 14-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைக் (Borewells) கடந்தும் சுரங்கம் அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது.
==============