"நான் உங்க தேவா, நம்மோடு சிஎம் சார்" : முதல்வரை சந்தித்த இன்ஸ்டாகிராம் சகோதரர்கள்!

Deva Boys Meets CM MK Stalin : இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பிரபலங்களான சகோதரர்கள் தேவா, ஜீவாவை தன் அலுவலகத்தில் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
Chief Minister MK Stalin met Instagram social media celebrities brothers Deva and Jeeva at his office
Chief Minister MK Stalin met Instagram social media celebrities brothers Deva and Jeeva at his office google
1 min read

நான் உங்க தேவா நம்மோடு சிஎம் சார்

Deva Boys Meets CM MK Stalin : இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பிரபலங்களான சகோதரர்கள் தேவா, ஜீவாவை தன் அலுவலகத்தில் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.இந்த சந்திப்பின் போது சிறுவர்களுடனான உரையாடல் காணொளியை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

முதல்வர் சந்திப்பை பகிர்ந்த நான் உங்க தேவா பிரபலம்

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு தங்கள்து பாணியில் முதல்வர் உடனான சந்திப்பை காணொளியாக பகிர்ந்துள்ளனர் . அதில் நான் உங்க தேவா. நம்மோடு சிஎம் சார் இணைந்துள்ளார்.

அவர் சொல்லும் அட்வைஸை எல்லோரும் கேட்பீங்க. அதனால சிஎம் சார் நமக்கு அட்வைஸ் கொடுக்கிறார்’ என முதல்வர் ஸ்டாலின் உடனான தங்களது சந்திப்பு காணொளியை பகிர்ந்துள்ளனர்

சகோதரர்களுடன் உரையாடிய முதல்வர்

உங்களின் ரீல்ஸ் வீடியோ உருவாக்கம் நன்றாக உள்ளது. அதற்காக எனது வாழ்த்துகள். படிப்பில் கவனம் செலுத்தவும். நீங்கள் சொன்னது போல உங்கள் கனவுப் பணியான ஆட்சியர், காவல் அதிகாரியாக வாழ்த்துகிறேன். உங்கள் கனவு நிறைவேற் வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் அக்காணொளியில் தெரிவித்தார்

உற்சாகப்படுத்த சந்திப்பு -முதல்வர்

உங்களை உற்சாகப்படுத்த நேரில் அழைத்தேன்’ என முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தார். மேலும், அவர்களின் கனவு குறித்தும் கேட்டறிந்தார். அரசுப் பள்ளியில் படிக்கும் அவர்களிடம் பள்ளியின் செயல்பாடு, காலை சிற்றுண்டி மற்றும் சத்துணவு குறித்த செயல்பாடுகளையும் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் பங்கேற்றார். மேலும், சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவாவின் குடும்பத்தையும் முதல்வர் சந்தித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in