கிராமத்து காவியம் பாரதிராஜா : "அரசு மரியாதை வழங்கப்படும்" முதல்வர் விஜய் அறிவிப்பு...!

உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த இயக்குநர் பாரதிராஜாவிற்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்
Chief Minister Vijay announces that state honors will be accorded to the late 'Village Epic' filmmaker Bharathiraja.
Chief Minister Vijay announces that state honors will be accorded to the late 'Village Epic' filmmaker Bharathiraja. google
1 min read

கிராமத்து மண்ணின் கருத்தை மக்களிடையே நிறுத்தியவர்

தமிழ் சினிமா வராலாற்றில் கிராமத்து மண்ணின் வாசனையை மக்களின் கண் முன்னே நிறுத்தி , கிராமங்களின் வாழ்வியலை திரைப்படம் மூலமாக காட்டியவர் இயக்குநர் பாரதிராஜா

16 வயதினிலே அறிமுகமான பாரதிராஜா

1977 ந் ஆண்டு 16 வயதினிலே திரைப்படம் மூலமாக் தமிழ் மண்ணின் வாழ்வியலி காட்டும் இயக்குநராக அறிமுகம் ஆனவர், அதனை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் , கருத்தம்மா போன்ற கிரானத்து மண்ணின் வாசனையை , வாழ்வியலை கதை களம் மூலமாக திரைக்கு கொண்டு வந்தவர்

உடல் நலைகுறைவால் காலமான காவியம்

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானர் இயக்குநர் பாரதிராஜா

முழு அரசு மரியாதை வழங்கப்படும்

உடல் நலக்குறைவால் உயிர் இழந்த இயக்குநர் பாரதிராஜ வின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முத்லவர் விஜய் அறிவித்துள்ளார் , அவ்ரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு , தெரிவித்தார்

முதல்வர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது

தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.

கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.

தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்

தமிழக அளுநர் இரங்கல்

இயக்குநர் பாரதிரானாவின் மறைவிற்கு தமிழக அளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in