

CM Joseph Vijay Trichy to Karur Road Trip Grand Welcome
சென்னை வான்வழியாகத் திருச்சி வந்தடைந்த தமிழக முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
முதல்வர் கரூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் வழியெங்கும், ஆங்காங்கே ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தவெக தொண்டர்களும் திரண்டு வந்து அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்து வருகின்றனர்.
வழியெங்கும் தவெக-வினர் பிரம்மாண்ட வரவேற்பு
சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாகக் கரூர் நோக்கிப் புறப்பட்டார்.
திருச்சி முதல் கரூர் வரையிலான சாலை வழியெங்கும் ஆங்காங்கே தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் பெரும் திரளாகக் கூடி மலர் தூவியும், வாழ்த்தொலி எழுப்பியும் முதல்வரை வரவேற்று வருகின்றனர்.
காரில் இருந்தவாறே ஏற்பு
மக்கள் மற்றும் தொண்டர்கள் மிக அதிகளவில் கூடியிருக்கும் முக்கிய சந்திப்புகளில், முதல்வர் விஜய் தனது காரின் உள்ளிருந்தவாறே கைகளை அசைத்து பொதுமக்களின் உற்சாக வரவேற்பை நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு பயணிக்கிறார்.
முதல்வர் பதவியேற்ற பின் முதல் கரூர் பயணம்
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, விஜய் கரூர் மாவட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
கரூரில் இன்று பிற்பகலில் நடைபெறவிருக்கும் முக்கிய அரசு விழாவில் பங்கேற்கும் அவர், கடந்த ஆண்டு கரூர் நெரிசல் சம்பவத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
அக்குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்குப் புதிய அரசுப் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
=====