முதல்வர் விஜயுடன் பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு : ”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை”

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வருகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆலோசிக்க வேண்டியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் முதல்வரிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டதாக பாமக தலைவர் தெரிவித்தார்
Chief Minister Vijay meets PMK leader Anbumani, holds important discussions on caste-wise census
Chief Minister Vijay meets PMK leader Anbumani, holds important discussions on caste-wise census google
1 min read

பாமகவின் கூட்டம்

பாமக சார்பில் அனைத்து சமுதாய தலைவர்களின் சமுதாய கலந்தாய்வு கூட்டத்தொடரை அன்புமணி நடத்தினார் , இதுல் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை முடிவுகள் எடுக்கப்பட்டு , இதன் முக்கியத்துவம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள்

இந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, தாவாக, கொமதேக, தமாகா உள்பட 43 கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் தமிழக அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கவேண்டும் என கலந்து கொண்ட அனைத்து கட்சிகள் சார்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பட்ஜெட் கூட்டதில் அறிவிப்பை வெளியிட வலியுறுத்தல்

இதற்கு முன்பாக ,பாமக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை முதல்வரிடம் வழங்கிய அன்புமணி, வருகின்ற பட்ஜெட் தொடரிலேயே சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணியின் கோரிக்கையை ஏற்று, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தவெக அரசு முன் வந்தால், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இந்தப் பணியும் மேற்கொள்ளப்படும்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in