கரூர் செல்லும் முதல்வர் விஜய் : 32 குடும்பங்களுக்கு அரசு வேலை, அரசு நிகழ்ச்சியிலும் பங்கேற்பு...!

கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணையை வழங்க முதல்வர் ஜோசப் விஜய் நாளை கரூர் செல்ல இருக்கிறார்
 Chief Minister Vijay visits Karur: Government jobs for 32 families.
Chief Minister Vijay visits Karur: Government jobs for 32 families.google
1 min read

கரூர் செல்லும் முதல்வர் விஜய் ,32 குடும்பங்களுக்கு அரசு வேலை

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணையை வழங்க முதல்வர் ஜோசப் விஜய் நாளை கரூர் செல்ல இருக்கிறார்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்

கரூரில் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியில் தவெக தலைவரும் முதல்வருவமான விஜய் தலைமையில் பிரசார சுற்றுப்பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாதுகாப்புகள் காரணமாக விஜய் நேரில் செல்லாமல், காணொலி வாயிலாக பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலும் மன்னிப்பும் கோரியிருந்தார்

தொடர்ந்து, நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரினார்.

கரூர் சம்பவம் - நேரில் செல்லும் முதல்வர்

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையிலும் , முதல்வர் கரூருக்கு செல்ல கூடாது என நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்து வந்ததும் ,அதை நிராகரித்ததும் ஒரு புறம் இருக்க , கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக நாளை கரூர் செல்லவுள்ளார்.

32 நபர்களுக்கு பணி நியமன ஆணை

பாதிக்கப்பட குடும்பங்களுக்கு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தொடர்ந்து, பணி நியமன ஆணைகளை வழங்குவதோடும்

கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.

தொழிற்சாலைக்கு அடிக்கல்

மேலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மனவாசி ஊராட்சியில் ரூ. 1700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு, அடிக்கல் நாட்டவுள்ளார்.

இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in