அரசு ஊழியர் போல கடமையாற்றும் முதல்வர் : தலைமைச் செயலகத்தில் விஜய் கடைப்பிடிக்கும் 'பஞ்ச்வாலிட்டி' அதிகாரிகள் நெகிழ்ச்சி!

முதல்வர் விஜய்யின் நிர்வாக நேர்த்தி அவரது எளிமை மற்றும் ஒழுக்கம் குறித்த விரிவான செய்தி.
Chief Minister Vijay's Strict Adherence to 'Punchuality' at the Secretariat—Officials Moved!
Chief Minister Vijay's Strict Adherence to 'Punchuality' at the Secretariat—Officials Moved!source: google
1 min read

Chief Minister Vijay's Strict Adherence to 'Punchuality' at the Secretariat—Officials Moved!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக விஜய், அரசியல் நகர்வுகளைத் தாண்டி, அரசு நிர்வாகத்தில் அவர் காட்டி வரும் அதீத ஒழுக்கம் மற்றும் எளிமை தற்போது அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பேசப்படுகிறது.

நேர மேலாண்மையில் ஒரு முன்மாதிரி

பதவியேற்ற முதல் நாளிலிருந்தே முதல்வர் விஜய் நேரத்தைக் கடைப்பிடிப்பதில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.

பதவியேற்பு விழா அன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சுமார் 70 நிமிடங்களுக்கு முன்பாகவே அதாவ்து 8:48 மணிக்கு விழா அரங்கிற்கு வந்து அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தினார்.

அதேபோல், எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்தலின் போதும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே தலைமைச் செயலகத்திற்கு வந்து தனது பணிகளைத் தொடங்கினார்.

தலைமைச் செயலகத்தில் முழுநேரப் பணி

சட்டசபைக் கூட்டங்கள் முடிந்த பின்னரும், ஒரு பொறுப்பான அரசு ஊழியரைப் போல தினமும் காலை 9:55 மணிக்கே அலுவலகம் வரும் அவர், மாலை 4 மணி வரை அங்கேயே இருந்து அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொள்கிறார்.

அரசு இயந்திரம் தொய்வில்லாமல் இயங்குவதை உறுதி செய்யும் வகையில், கோப்புகளை ஆய்வு செய்வது மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிப்பதில் அவர் முழு நேரத்தையும் செலவிடுகிறார்.

எளிமையான மதிய உணவு

முதல்வர் விஜய்யின் எளிமைக்கு மற்றுமொரு சான்றாக அமைந்திருப்பது அவரது மதிய உணவு பழக்கம்.

அலுவலகத்திற்கு வரும்போது வீட்டிலிருந்தே மதிய உணவை எடுத்துக்கொண்டு வரும் அவர், பணிகளுக்கு இடையே மிக எளிமையான முறையில் உணவருந்திவிட்டு மீண்டும் நிர்வாகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

இத்தகைய அணுகுமுறை பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசார் மற்றும் உயரதிகாரிகள் மத்தியில் பெரும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றத்திற்கான தொடக்கம்

ஒரு முதலமைச்சர் இவ்வளவு சாதாரணமாகவும், அதேசமயம் மிகக்கடுமையான ஒழுக்கத்துடனும் செயல்படுவது தமிழக நிர்வாகத்தில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் என சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அரசு நிர்வாகத்தில் அவர் காட்டும் இந்த நேர்த்தியும், நேர்மையும் தமிழகத்திற்கு ஒரு புதிய நிர்வாகக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

====

logo
Thamizh Alai
www.thamizhalai.in