ஒரே நாளில் ரூ.993 உயர்வு : வணிக சிலிண்டர் விலை கடும் உயர்வால் உணவகங்களில் விலை உயரும் அபாயம்! பொதுமக்கள் அதிர்ச்சி!

வணிக சிலிண்டர் விலை இன்று 993 ரூபாய் உயர்ந்துள்ளது. 5 கிலோ சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளதால் உணவகங்களில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Commercial LPG Cylinder Price Hike Today: 19kg and 5kg Cylinder Rates Increased.
Commercial LPG Cylinder Price Hike Today: 19kg and 5kg Cylinder Rates Increased.source: google
1 min read

Commercial LPG Cylinder Price Hike Today: 19kg and 5kg Cylinder Rates Increased.

மேற்காசிய போர் சூழல் / அந்நிய செலாவணி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அந்நிய செலாவணி மதிப்பின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

மே மாதத்திற்கான புதிய விலைப்பட்டியல்

அந்த வகையில், மே மாதத்திற்கான புதிய விலைப்பட்டியலை எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ளன. இது வணிகப் பயன்பாட்டாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிடுகிடுவென உயர்ந்த வணிக சிலிண்டர்

வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை இன்று ஒரே நாளில் 993 ரூபாய் அதிகரித்துள்ளது.

இன்று வணிக சிலிண்டர் 3,239 ரூபாய்க்கு விற்பனை

கடந்த மார்ச் மாதம் 144 ரூபாயும், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும் உயர்ந்த நிலையில், தற்போது மே 1-ம் தேதியான இன்று இந்த அதிரடி விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒரு வணிக சிலிண்டரின் விலை 3,239 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிறிய வகை சிலிண்டர் விலையும் உயர்வு

வணிக சிலிண்டர் மட்டுமின்றி, குறுகிய காலத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் 5 கிலோ சிறிய வகை சிலிண்டர் விலையும் இன்று ஒரே நாளில் 261 ரூபாய் உயர்ந்துள்ளது.

இது சிறு வணிகர்கள் மற்றும் அவசரத் தேவைக்காகப் பயன்படுத்துவோருக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் நிலையில் என்ன?

வணிக சிலிண்டர் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தாலும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இது பழைய விலையான 928.50 ரூபாய்க்கே தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவது இல்லத்தரசிகளுக்குச் சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

உணவுப் பொருட்கள் விலை உயருமா?

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் சூழல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாகவே வணிக சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தற்போது விலை பன்மடங்கு உயர்ந்திருப்பதால், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in