வணிக சிலிண்டர் விலை உயர்வு
மே மாதத்திற்கான புதிய விலைப்பட்டியலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் நிலையில் . இது வணிகப் பயன்பாட்டாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் அதிகரித்து உணவு கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களை மிகுத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
3,239 ரூபாய்க்கு விற்பனை
கடந்த மார்ச் மாதம் 144 ரூபாயும், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும் உயர்ந்த நிலையில், தற்போது மே 1-ம் தேதிஅதிரடி விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒரு வணிக சிலிண்டரின் விலை 3,239 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிறிய வகை சிலிண்டர் விலையும் உயர்வு
வணிக சிலிண்டர் மட்டுமின்றி, குறுகிய காலத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் 5 கிலோ சிறிய வகை சிலிண்டர் விலையும் இன்று ஒரே நாளில் 261 ரூபாய் உயர்ந்துள்ளது.
இது சிறு வணிகர்கள் மற்றும் அவசரத் தேவைக்காகப் பயன்படுத்துவோருக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி : விடுதி கட்டணங்கள் விலை உயர்வு
]4 பேர் தங்கும் ஹாஸ்டல் அறையின் கட்டணம் ரூ.6,500ல் இருந்து 7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது விடுதி தங்கிபணிபுரிபவர்கள் , படிப்பவர்கள் என அனைவரையும் பதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து அந்த சோசியேசன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
இது குறித்து தமிழ்நாடு ஐடி விடுதி, PG ஓனர்ஸ் அசோசியேசன் வெளியிட்ட அறிவிப்பில், விடுதியில் தங்கி இருக்கும் விருந்தினர்களுக்கு வணக்கம், கடந்த 2025 பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து எரிவாயு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால்
ஒரு சிலிண்டர் 6000,7000 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மர அடுப்புகளை பயன்படுத்தி எங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறோம்.
மரக்கட்டைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே தங்கும் விடுதிகளின் கட்டணம் மே 5ம் தேதி முதல். புதிய கட்டண விதிகள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விலை நிர்ணயம்
அறிக்கையில் தங்கும் விடுதியின் விலை நிரனயமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
4 sharing Non Ac Rs. 6500-Ac7000
3 Sharing Nan Ac Rs. 7000-Ac8000
32 Sharing Non Ac Rs. 8000-Ac9000
போன்ற தங்கும் விடுதிகளுக்கு குறைந்தபட்ச தொகையாக நிர்ணயத்திருக்கிறோம். ஒரு சில விடுதிகளில் அவர்கள் கொடுக்கும் வசதிகளை பொறுத்து இந்த விலை மாறுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
===============