

Cooking gas cylinder within 4 hours of booking: New service in Chennai!
சமீபகாலமாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புக் செய்வதிலும், அவை வீடு வந்து சேர்வதிலும் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் அதற்குத் தீர்வாக ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
4 மணி நேரத்தில் வீட்டிற்கு வரும் சிலிண்டர்
Indane வாடிக்கையாளர்கள் 10 கிலோ எடை கொண்ட Indane XTRALITE சிலிண்டரைப் புக் செய்த வெறும் 4 மணி நேரத்திற்குள் தங்களது இல்லங்களிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
விரிவுபடுத்தப்பட்ட பகுதிகள்
தொடக்கத்தில் கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருப்பூர், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத் திட்டம்
வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் இச்சேவை நாட்டின் மேலும் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
XTRALITE சிலிண்டரின் சிறப்பம்சங்கள்
வழக்கமான உலோக சிலிண்டர்களுக்குப் பதிலாக, ஒளி ஊடுருவக்கூடிய சிறப்பு வகை பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் பொருட்களால் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டருக்குள் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை வெளியே இருந்தபடியே பார்வையின் மூலம் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த இணைப்பைப் பெறுவது எப்படி?
ஏற்கனவே Indane இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், மானியம் இல்லாத பிரிவின் கீழ் இந்த 10 கிலோ XTRALITE சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம்.
இச்சிலிண்டருக்கான பாதுகாப்பு வைப்புத்தொகை ரூ.3,000 ஆகும்.
ஏற்கனவே பழைய சிலிண்டருக்கு வைப்புத்தொகை செலுத்தியிருப்பவர்கள், மீதமுள்ள தொகையை மட்டும் செலுத்தி XTRALITE சிலிண்டருக்கு மாறிக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: ”புதிய சட்டசபை, தலைமைச் செயலகம்” : ரூ.1,200 கோடியில், 20 லட்சம் சதுர அடியில் அமைகிறது, முதல்வர் விஜய் அறிவிப்பு!
=====