கூடுதல் தொகுதிகள் வேண்டும் : திமுகவுக்கு மா.கம்யூ 'செக்'

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூடுதல் தொகுதிகள் வேண்டும் : திமுகவுக்கு மா.கம்யூ 'செக்'
1 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்தின் சமீபத்திய பேட்டிகள் திமுகவிற்கு தலைவலியை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கூட்டணிக்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவிப்பதாக திமுக தலைமை கருதுகிறது.

இதனிடையே அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த பெ. சண்முகம், கூட்டணி கட்சிகளை மதிப்பதில் திமுகவை எந்த குறையும் சொல்ல முடியாது என்றும், கடந்த 2021 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற கொள்கையின் படி குறைந்த தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. ஆனால் அதே நடைமுறை எதிர்வரும் தேர்தலிலும் தொடரக்கூடாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

மேலும் 2026 தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது தங்கள் கட்சியின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக கூட்டணி உறுதியான கூட்டணி என்று கூறப்பட்டாலும், இடப்பிரச்சினையில் சலசலப்புகள் ஏற்படுவது உறுதி என்பது இப்போதே தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in