ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பருப்பு, சர்க்கரை? : தமிழக அரசின் புதிய திட்டம்..!

தமிழக ரேஷன் கடைகளில் எடைக்குறைவைத் தடுக்க சர்க்கரை மற்றும் பருப்பை பாக்கெட்டுகளில் வழங்க அரசு முடிவு.
Dal and sugar to be sold in packets at ration shops: Tamil Nadu government's new scheme!
Dal and sugar to be sold in packets at ration shops: Tamil Nadu government's new scheme!ai
1 min read

Dal and sugar to be sold in packets at ration shops: Tamil Nadu government's new scheme!

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரேசன் கடைகளின் தற்போதைய நிலை

தமிழகம் முழுவதும் உள்ள 34,916 நியாயவிலைக் கடைகள் வாயிலாக, சுமார் 2 கோடியே 28 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, பச்சரிசி, கோதுமை, மானிய விலையில் துவரம்பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டு

எனினும், சில கடைகளில் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாகவும், தரமற்ற அல்லது காலாவதியான சர்க்கரை மற்றும் பருப்பு விநியோகிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

புதிய திட்டத்தின் அம்சங்கள்

எடைக்குறைவு மற்றும் தரக் குறைபாடுகளைத் தவிர்க்கும் வகையில், சர்க்கரை மற்றும் துவரம்பருப்பு ஆகியவற்றை இனி பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரிசி மற்றும் கோதுமை ஆகியவை வழக்கம்போல் தளர்வாகவே வழங்கப்படும்.

பாக்கெட்டுகளில் முக்கிய தகவல்கள் இடம்பெறும்

ஏற்கனவே பாமாயில் பாக்கெட்டுகளில் வழங்கப்படுவதைப் போல, இனி பருப்பு மற்றும் சர்க்கரை பாக்கெட்டுகளின் மீதும், பொருள் கொள்முதல் செய்யப்பட்ட இடம், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி ஆகிய விவரங்கள் தெளிவாக அச்சிடப்படும்.

பட்ஜெட்டில் அறிவிப்பு மற்றும் அமலாக்கம்

மாநிலம் முழுவதும் சுமார் 2.30 கோடி கார்டுதாரர்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தும்போது ஏற்படும் கூடுதல் செலவினங்கள் குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தற்போது மதிப்பீடு செய்து வருகின்றனர்.

அக்டோபரில் நடைமுறைக்கு வரும் திட்டம்?

வருகிற தமிழக பட்ஜெட்டில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும், அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இத்திட்டம் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’EAST’ : ”செயற்கை சூரியன்” சீனா பிரம்மாண்ட திட்டம் : 582 டன் எடையுள்ள காந்தம் : அபரிதமான மின்உற்பத்தி, 2030 இலக்கு.!

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in