உயர்கல்வி துறைக்கென தனி இணையதளம் : ஊழலை தடுக்க நடவடிக்கை : அமைச்சரின் அதிரடி அப்டேட்!

உயர்கல்வி துறையில் நடக்கும் ஊழல்கள் ,புகார்களை தெரிவிக்க, தனி இணையத்தளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Dedicated website for the Higher Education Department: Minister's  update
Dedicated website for the Higher Education Department: Minister's update google
1 min read

உயர்கல்விதுறையில் இனி ஊழல் இருக்காது

உயர்கல்வி துறையில் இனி எந்த வகையான ஊழல்கள் , புகார்கள் இருக்காது என உயர்கல்விதுறை அமைச்சர் விஸ்வநாதன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது

இது குறித்த அமைச்சர் கூறும்போது , கல்விகடன் குறித்து சில தகவல்களை வழங்கிய 4.5 லட்சத்தைவிட அதிக தொகையில் கல்வி கடன் கேட்கும்போது பிணை கேட்கிறார்கள்.

இதை மாற்றி முதல்வர் விஜய், விரைவில் புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த ஆண்டு 1.5 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்

வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தும் அரசு, அமைச்சர்

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் , கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பும் இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார்" என்றார்.

உயர்கல்வித்துறை ஊழல், விரைவில் புதிய இணையதளம்

உயர்கல்விதுறையில் ஏற்படும் ஊழல்கள் , முறைகேடுகள் பணி நியமனம், பணி மாறுதல், பதவி உயர்வு என லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது. இந்த துறையில் யாரேனும் லஞ்சம் கேட்டாலோ, வாங்கினானோ எங்களிடம் தெரிவிக்கலாம்.

இதற்காக புகார் அளிக்க உயர்கல்வித் துறைக்கென தனி இணையதளம் விரைவில் அறிவிக்கப்படும். அதில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று உயர்கல்விதுறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்

உயர்கல்வு துறை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

ஆட்சிக்கு வந்து இன்னும் 60 நாள்கள்கூட ஆகவில்லை , கூடிய விரைவில் உயர்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் படிப்படியாக சரிசெய்யப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in