

Defamation case against Annamalai withdrawn! DMK Treasurer T.R. Baalu makes a surprise move in court!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அவதூறு வழக்கை திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர். பாலு இன்று அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலைக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கு, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை 'திமுக ஃபைல்ஸ்' என்ற பெயரில் அக்கட்சி பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.
அதில், திமுக எம்பி டி.ஆர். பாலு, அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமாக 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
நீதிமன்ற விசாரணை
இந்த குற்றச்சாட்டுகள் தங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி, சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் டி.ஆர். பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அண்ணாமலை குறுக்கு விசாரணை
கடந்த 26-ஆம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது, டி.ஆர். பாலுவிடம் அண்ணாமலையே நேரடியாக குறுக்கு விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை இன்றுக்கு (30-ஆம் தேதி) தள்ளிவைக்கப்பட்டது. இன்று (ஜூன்.30) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கை தாம் திரும்பப் பெறுவதாக டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
=====