

Dharapuram by-election vote counting: Who is leading from the start? TVK, DMK, and AIADMK in a fierce contest!
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட முதல் சுற்றிலிருந்தே தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
தவெக வேட்பாளர் முன்னிலை நிலவரம்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தவெக வேட்பாளர் சத்யபாமா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காலை 9 மணி நிலவரப்படி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்:
சத்யபாமா (தவெக): 342 வாக்குகள்
சுகன்யா (திமுக): 235 வாக்குகள்
பானுமதி (அதிமுக): 215 வாக்குகள்
இதன் மூலம் தவெக வேட்பாளர் சத்யபாமா 107 வாக்குகள் வித்தியாசத்தில் தனது முன்னணி நிலையைத் தக்கவைத்துள்ளார்.
வாக்குப்பதிவு மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள்
தாராபுரம் தொகுதியில் 80.25 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இத்தொகுதியில் தவெக, திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா உட்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
23 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை
தாராபுரம் தொகுதிக்கான வாக்குகள் மொத்தம் 23 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
9.30 மணி நிலவரம்
சத்யபாமா (தவெக): 4,981
பானுமதி (அதிமுக): 5,573
சுகன்யா (திமுக) : 4,016
கார்த்திகா (நாம் தமிழர்) :352
லட்சுமணன் (இந்திய கம்யூ): 107
9.30 கள நிலவரப்படி 592 வாக்குகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி,
மூன்று மற்றும் நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்த நிலையில் ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் கள நிலவரம் மாறியுள்ளது, தவெக வேட்பாளர் சத்யபாமா மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார்.
சுற்று 5 கள நிலவரம்
சத்யபாமா (தவெக): 13,285
பானுமதி (அதிமுக): 12,545
சுகன்யா (திமுக) : 11,622
கார்த்திகா (நாம் தமிழர்) :898
லட்சுமணன் (இந்திய கம்யூ): 260
10 சுற்று கள நிலவரம்
சத்யபாமா (தவெக): 27649
பானுமதி (அதிமுக): 23521
சுகன்யா (திமுக) : 22503
கார்த்திகா (நாம் தமிழர்) :2156
லட்சுமணன் (இந்திய கம்யூ): 509
4128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை
16வது சுற்று கள நிலவரம்
சத்யபாமா (தவெக): 48675
பானுமதி (அதிமுக): 31067
சுகன்யா (திமுக) : 39039
கார்த்திகா (நாம் தமிழர்) :3934
லட்சுமணன் (இந்திய கம்யூ): 882
9636 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை
18வது சுற்று கள நிலவரம்
சத்யபாமா (தவெக): 54099
பானுமதி (அதிமுக): 35892
சுகன்யா (திமுக) : 45088
கார்த்திகா (நாம் தமிழர்) :4440
லட்சுமணன் (இந்திய கம்யூ): 1007
9011 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை
===========