திமுக உடன் தொகுதிப் பங்கீடு; விசிகவிற்கு நீடிக்கும் இழுபறி : வேதனையுடன் திருமாவளவன் காணொளி வெளியீடு

DMK VCK Alliance Seat Sharing 2026 : திமுக கூட்டணி கட்சிகளின் பலருக்கும் தொடர் இழுபறி நீதித்துவருவதால் கூட்டணி இடஒதுக்கீடு தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.
DMK VCK Alliance Seat Sharing 2026 : Seat sharing with DMK prolonged tug of war for VKC: Thirumavalavan releases video
DMK VCK Alliance Seat Sharing 2026 : Seat sharing with DMK prolonged tug of war for VKC: Thirumavalavan releases videogoogle
1 min read

திமுக கூட்டணி சிக்கல்

DMK VCK Alliance Seat Sharing 2026 : சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளில் தொகுதி பங்கிட்டு தொடர்பாக இழுபறியானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

கூட்டணி கட்சிகளிடையே நீடிக்கும் தொடர் இழுபறி

சட்டமன்ற தேர்தலில் திமுக வுடன் கூட்டணி கட்சிகளான சிபிஐ(எம்) மற்றும் விசிக ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு கேட்கும் தொகுதிகளை இன்னும் ஒதுக்காததால் கூட்டணி கட்சிகளிடையே தொடர் இழுபறி மற்றும் பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

திருமாவளவன் வேதனை வீடியோ

தொகுதி பங்கீட்டில் இழுபறியானது நீதித்து வரும் நிலையில் விசிக உடனான தொகுதிப் பங்கீடும் முடிவுக்கு வராத நிலையில், குறைவான தொகுதிகளையே பெற்று போட்டியிடும் நிலை உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

விசிக - விருப்ப மனுக்கள் விநியோகம்

காணொளி வெளியிட்டு திருமாவளவன் கூறியதாவது, மிகக் குறைவான எண்ணிக்கையிலான தொகுதிகளையே பெற்று கூட்டணியில் போட்டியிடுகிறோம். இருந்தாலும், 234 தொகுதியிலிருந்தும் விருப்பம் மனுக்களை பெறுகிறோம். இது, மெகா கூட்டணி. 23 கட்சிகள் இணைந்துள்ள கூட்டணி.

ஆகவே குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடக் கூடிய நிலையே தற்போது உள்ளதாக தெரிவித்த அவர் , இருந்தாலும் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் எவ்வளவு பேர் போட்டியிட விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள விருப்ப மனு பெறப்படுகிறது என்றும் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்

விருப்பமனு : நேர்காணல் நடத்தப்படாது

இது ஒரு ஜனநாயக நடைமுறையாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி கடைப்பிடித்து வருகிறது.

விருப்ப மனுக்கள் பெறப்பட்டாலும் அதன் பிறகு நேர்காணல் நடத்தப்படாது. கட்சித் தலைவர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பேன் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விருப்ப மனுக்களை அறிவித்து உங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதில் மகிழ்ச்சி என்றும் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in