
முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் முடிவடைந்த நிலையிலும் மாநாடு குறித்தான விமர்சங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது என்ற நெறியாளரின் கேள்விக்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது அவர்களின் உரிமை.
மதச்சார்பின்மை என்று காங்கிரஸ், திமுக, விசிக தங்களை வளர்த்துக்கொள்ளப் பார்க்கும் போது பாஜக முருகன்,இந்து மதம் என்று மாநாடு நடத்துவது தவறில்லை
அதனால் தான் பாஜகவின் வளர்ச்சிக்கு தமிழ்க் கடவுள் முருகனை கையில் எடுக்கின்றனர். இதை அதிமுகவும் வரவேற்கிறது.
செல்லூர் ராஜூ,ஆர்.பி.உதயகுமார்,கடம்பூர் ராஜூ மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் மாநாட்டுக்கு சென்றதே முருகன் தங்களுக்கும் வாக்கு வங்கியை கொடுப்பார் என்பதற்காகத்தான்.
பாஜகவை நம்பி திமுகவுடன் போட்டியிடலாம் என அதிமுகவினர் கருதுகின்றனர்.அதனால் தான் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கிறார்.
ஆனால், கடைசியில் அண்ணா திமுக பாஜகவை நம்பி தான் திமுக அணியை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பவன் கல்யாண் முருகன் மாநாட்டில் கலந்து கொண்டதற்கு காரணம் திமுகவின் தெுலுங்கு சமுதாய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மண்ணில் நிலைத்து நிற்க பாஜக இவற்றை செய்தே ஆக வேண்டும்.
ஒன்று அண்ணாமலை தலைமையில் நிமிர்ந்து நின்று திமுக, அதிமுக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராசர் சொன்னதைப் போல எதிர்க்க வேண்டும்.
மற்றொன்று, எடப்பாடி பழனிசாமியை இணைத்துக்கொண்டு இந்துத்துவா சார்ந்த பிரச்சனைகளை அவரையே பேச வைப்பது.
இதைத்தான் இப்போது வேலுமணி என்னும் தூண்டிலை வைத்து எடப்பாடி பழனிசாமி செய்துகொண்டு இருக்கிறார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.
இந்தச் செய்தி தொடர்பான முழுமையான காணொளியை தமிழ் அலை youtube channel-லில் பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=1XnzEw3Yqms