

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு
Edappadi Palanisamy on DMK : சேலம் மாவட்டம் எடப்பாடியில் நிருபர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அளித்த பேட்டி: தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணிக்கு நயினார் நாகேந்திரன் அழைத்தது பாஜவின் கருத்து. திமுகவிற்கு எதிரான ஒருமித்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரலாம். அதிமுக ஆட்சியில் இருந்த போது ரூ.5 ஆயிரம் கொடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் என்ன குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்று விமர்சித்தார்.
125 நாட்கள் உயர்த்தியதற்கு பாராட்ட மனமில்லை
மனமில்லை 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கை. இதுவரைக்கு நிறைவேற்றி இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது.
பாராட்ட மனமில்லை. அது பெயர் மாற்றம் குறித்து நாங்கள் கோரிக்கை வைத்து இருக்கிறோம். பழைய பெயர் தொடர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். பார்லிமென்டில் வாதாட வேண்டியதை, பார்லிமென்டில் வாதாட வேண்டும் என்று கூறினார்.
அதிக கடன் வாங்கியதே திமுக அரசின் பெரிய சாதனை
அதிக கடன் மாநில அரசுக்கு நிதி பிரச்னை இருப்பதாக கேள்வி எழுப்ப வேண்டும் என்று தெரிவித்த அவர், அவர்கள் பார்லிமென்டில் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியாவில் அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் தான். இது திமுக அரசின் பெரிய சாதனை. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழகஅரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னர் தான் கடன் அதிகரித்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.