210 இடங்களில் அதிமுக வெற்றி பெறும் : எடப்பாடி பழனிசாமி சூளுரை!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
AIADMK will win 210 seats - Edappadi Palaniswami promises!
AIADMK will win 210 seats - Edappadi Palaniswami promises!google
2 min read

சென்னையில் அதிமுக பொதுக்கூட்டம்

edappadi palaniswamy speech சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செயற்குழு மற்றும் பொதுக்குழுவை வழிநடத்துவார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

திமுகவை வீழ்த்துவதற்கு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளித்தல், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஈபிஎஸ்-க்கு மட்டுமே என்பன உள்ளிட்ட மொத்தம் 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி உரை

பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஏழை எளிய மக்கள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளிகள் என அனைத்துத் தரப்பினருக்காகவும் திட்டங்களைக் கொண்டு வந்து சாதித்த தலைவர்கள் நம் இருபெரும் தலைவர்கள் (எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா). அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான் ஏழைகள், மகளிருக்குக் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு என அற்புதமான திட்டங்கள் கிடைத்தன.

"அதிமுக இருக்கின்ற காரணத்தில்தான் ஊடகமும் பத்திரிகையும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற நிலை உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் வாரிசுகள் இல்லை. அவர்கள் நாட்டு மக்களையே வாரிசாகப் பார்த்தார்கள்," என்று ஈபிஎஸ் குறிப்பிட்டார்.

அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்

"சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நான் முதலமைச்சரானபோது, அதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில், தி.மு.க.வினர் என் மேஜை மீது ஏறி நடனம் ஆடினார்கள். சபாநாயகரை இழுத்துத் தள்ளி அவரது இருக்கையில் அமர்ந்தார்கள். அவரது மைக் உடைக்கப்பட்டது.

அப்படிப்பட்ட கொடுமையான நிகழ்வை ஏற்படுத்தியவர் இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சட்டையைக் கிழித்து வீதியில் நின்றவர் இன்றைய முதல்வர். அன்று சட்டையைக் கிழித்துதான் வெளியே சென்றீர்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்," என்று அவர் சூளுரைத்தார்.

2021 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றோம்

மு.க.ஸ்டாலின் விபரம் தெரியாமல் பேசி வருவதாக விமர்சித்த ஈபிஎஸ், பொதுமக்கள் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேறு மாதிரியும் வாக்களிப்பார்கள் என்ற தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, "2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றோம். 2024 அதிமுக கூட்டணி வாங்கிய வாக்கு அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் 23.5 சதவீதம் வாக்கு வாங்கி உள்ளது. பாஜக 18 சதவீதம் வாக்கு வாங்கியது. மொத்தம் 41.33 சதவீதம் வாக்கு உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் செல்வாக்கை ஸ்டாலின் இழந்துவிட்டார்

மேலும், அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலின் முடிவுகளை வைத்துக்கொண்டு, முதலமைச்சர் தற்போது 30 லட்சம் பேருக்குக் கூடுதலாக மாதம் 1000 ரூபாய் தருகிறார். மக்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள், ஆனால் ஓட்டு அதிமுகவுக்குத் தான் போடுவார்கள். மக்கள் செல்வாக்கை ஸ்டாலின் இழந்துவிட்டார்." என்று பேசினார்.

"2026 சட்டமன்ற தேர்தலில் மக்களை எதிர்கொள்ள முடியாமல் ஸ்டாலின் பயத்தில் இருக்கிறார். அதை சரிசெய்யவே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்களின் நலம் கருதி கொடுக்காமல், தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு 10 லட்சம் மடிக்கணினி கொடுக்கிறார்கள்." என்றும் அவர் விமர்சித்தார்.

விவசாயிகளுக்கு திமுக அரசு அநீதி இழைக்கிறது

பா.ஜ.க.வோடு அதிமுக கூட்டணி என்று தான் விமர்சிக்க முடியும்; ஆனால் ஆட்சியில் குறைகூற முடியாதபடி இருந்தோம். அதேபோன்றதொரு ஆட்சியைத் தமிழகத்தில் மீண்டும் கொண்டு வருவோம். தி.மு.க. ஆட்சியில் பிரிவினை எப்போதும் எடுபடாது. பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்," என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். "விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு அநீதி இழைக்கிறது.

விவசாயிகள் போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கும் நிலை உள்ளது; சொத்து வரி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in