விரைவு ரயில் சேவையில் மாற்றம்
Egmore Railway Station Renovation : எழும்பூரில் நடைபெறும் புனரமைப்பு பணிகள் காரணமாக விரைவு ரயில் சேவையில் மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே புறநகர் ரயில் சேவையில் மாற்றமானது இந்த புனரமைப்பு பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்
எழும்பூர் புனரமைப்பு பணிகள் காரணமாக விரைவு ரயில்களான இதன் காரணமாக, வரும் ஏப்ரல் 05- ஆம் தேதி இயக்கப்படும் ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் சேது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (22662), ராமேஸ்வரம்- சென்னை
எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16752), தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (16866), கொல்லம்- சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (20636) ஆகிய ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து ரயில் புறப்படும்
அதன்படி இந்த விரைவு ரயில்கள் வரும் ஏப்ரல் 06- ஆம் தேதி இயக்கப்படும் திருநெல்வேலி- சென்னை எழும்பூர் நெல்லை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (12632), சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் சேது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (22661), சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (12661), சென்னை எழும்பூர்-கொல்லம்
அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (20635), சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் (16751), சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (16865) ஆகிய ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்; இந்த ரயில்கள் தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ரம்ஜான் பண்டிகை : சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள்! : எழும்பூர் - கன்னியாகுமரி இடையே இயக்கம்
குறிப்பிடப்பட்ட நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் அங்கு சென்று ஏறிக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது