தமிழகத்திற்கு 327 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ,தேர்தல் குறித்தான அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் 327 பார்வையாளர்கள் நியமனம் செய்துள்ளது
Election Commission announces 327 observers appointed for Tamil Nadu Assembly Election 2026
Election Commission announces 327 observers appointed for Tamil Nadu Assembly Election 2026google
1 min read

2026 சட்டமன்ற தேர்தல்

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படிதமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கான தேர்தல்

அதன்படி தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற என்றும்,வேட்புமனுத்தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளதாகவும் .தமிழகத்தை பொறுத்தவரை 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும்

அதனை தொடர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .

மேலும் படிக்க :வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 27ம் தேதி வரை அவகாசம் : அர்ச்சனா பட்நாயக்

தமிழகத்துக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கான தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது .இவர்கள் தேர்தல் குறித்தான பாதுக்காப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

நியமிக்கப்பட்ட புதிய தேர்தல் பார்வையாளர்கள்

அதன்படி ,பொது பார்வையாளர்களாக (General Observers) 136 பேர், காவல் பார்வையாளர்களாக (Police Observers) 40 பேர், செலவு பார்வையாளர்களாக (Expenditure Observers) 151 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in