மருத்துவக் காரணத்திற்காக ரூ.50,000 எடுத்து செல்லலாம்; வாட்ஸ்அப் ஆதாரம் போதுமானது, அர்ச்சனா பட்நாயக் தெரிவிப்பு!

Archana Patnaik : மருத்துவக் காரணத்திற்கு ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதுமானது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
Election officer Archana Patnaik Announced says Rs. 50,000 can be taken for medical reasons ahead Of TN Election 2026
Election officer Archana Patnaik Announced says Rs. 50,000 can be taken for medical reasons ahead Of TN Election 2026google
1 min read

2026 சட்டமன்ற தேர்தல்

Archana Patnaik : வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக தமிழத்தில் நடைபெறும் என இந்திய தேர்தலை ஆணையம் அறிவித்துள்ளது . தேதி அறிவித்த பின்பு முக்கிய கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது .

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அனைத்து நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பொதுமக்கள் யாரும் தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை அதாவது வரும் மே 6-ந் தேதி வரை தனிநபராக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை எடுத்து செல்ல அனுமதியானது மறுக்கப்பட்டுளள்து.

மருத்துவக் காரணத்திற்காக பொதுமக்கள் ரூ.50,000க்கு மேல் எடுத்து செல்லலாம்

மருத்துவக் காரணத்திற்கு பொதுமக்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளம் வழியாக காண்பித்து எடுத்து செல்லலாம் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பறக்கும் படைக்கு அறிவுறுத்தல்

மேலும் தேர்தல் நடந்து சோதனையின் போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தபட்டிருப்பதாக என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in