கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை - எடப்பாடி பழனிசாமி!

EPS vs OPS : ஓபிஎஸ் கட்சிக்கு இழைத்த துரோகம் காரணமாக, அடிப்படை பதிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் எனவும் 2026 தேர்தல் முடிவில் அதிமுகதான் ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
EPS vs OPS Edappadi Palanisamy Speech About OPS Joining To ADMK
EPS vs OPS Edappadi Palanisamy Speech About OPS Joining To ADMKSource : Google
1 min read

ஓபிஎஸ் எதிர்பார்ப்பு

EPS vs OPS Edappadi Palanisamy About OPS Joining To ADMK : தேனியில் அவரது பண்ணை வீட்டில் செய்தியாளரக்ளை சந்தித்து பேசிய ஓபிஎஸ், “டிடிவி தினகரன் மற்றும் எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதிமுக வெற்றி பெற வேண்டும் என கூறுகிறார்கள். அதைத்தான் நானும் கூறுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் நாங்கள் இணைய வழிவகை செய்ய வேண்டும். இரண்டாவது தர்மயுத்தம் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியேரால்தான் ஏற்பட்டது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது என்று கூறினார்.மேலும், அதிமுகவில் இணைய நாங்கள் தயார். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா?” எனத் தெரிவித்திருந்தார். அதிமுகவில் இணைய ஓபிஎஸ் மீண்டும் இன்று விருப்பம் தெரிவித்த நிலையில், இதற்கு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் வாயிலாக மீண்டும் தன்னுடைய முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி

இந்நிலையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘நான் பலமுறை சொல்லிவிட்டேன். அவர் 4 வருடமாக கட்சியில் இணைய வேண்டும் என கேட்டு வருகிறார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது என்பது நான் எடுத்த முடிவு இல்லை. 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்த எடுத்த முடிவின்படி, ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சிக்கு இழைத்த துரோகம் காரணமாக பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவு இது. 2026 தேர்தல் முடிவில் அதிமுகதான் ஆட்சியமைக்கும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் உங்களிடம் தெரிவிப்போம். சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி இறுதி வடிவம் பெற்றவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in