கோவில் பிரசாதங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி கட்டாயம்... : அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் உள்ள கடைகளில் வழங்கப்படும் பிரசாதங்களில் தயாரிப்பு தேதி குறிப்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Expiration date must be mentioned on offerings – Minister Ramesh announces
Expiration date must be mentioned on offerings – Minister Ramesh announces google
1 min read

காலாவதி தேதி கட்டாயம்

தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் உள்ள கடைகளில் வழங்கப்படும் பிரசாதங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

அமைச்சர் ஆய்வு

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நடத்தப்பட்ட ஆய்வில் பிரசாத கடைகளில் பிரசாதம் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்யப்படு, நிலையில் அது கட்டாயமாக்க வேண்டும்

அனைத்து பிரசாத கடைகளும் பின்பற்ற அறிவுறுத்தல்

இனி அனைத்து கோயில்களின் பிரசாத கடைகளிலும் இந்த நடவடிகை முறையாக பின்பற்ற வேண்டும் . உரிய முறையில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் ,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களில் உள்ள பிரசாத கடைகளில் இதை பின்பற்ற வேண்டும் எனவும் உரிய முறையில் அதிகாரிகள் அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளோம்.

அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்

ஒப்பந்ததாரர்கள் அதை சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால் விளக்கம் கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

கோயில்களில் சுகாதார நடவடிக்கை

கோவில்களில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தர்விட்டுள்ளதாகவும் .

அதேபோல கோவில்களில் உள்ள கழிப்பறைகளை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அதனை முறையாக குறிப்பெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதாக் அமைச்சர் தெரிவித்துள்ளார்

திடீர் ஆய்வு நடத்தி : பிரச்னைக்ளுக்கு தீர்வு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும். அப்படி நடத்தும் போது அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் உரிய தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in