முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என பவன் கல்யாண் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது...
Faith and Tradition Prevail: Pawan Kalyan Reacts to Thiruparankundram Deepam Verdict
Faith and Tradition Prevail: Pawan Kalyan Reacts to Thiruparankundram Deepam VerdictGoogle
1 min read

திருப்பரங்குன்றம் தீப விவாகரம் :

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வரவேற்று, ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இது முருக பக்தர்களுக்குக் கிடைத்த வெற்றி; அவர்களின் வழிபாட்டு உரிமைகளையும், பாரம்பரிய மரபுகளையும் பாதுகாப்பதற்கான முக்கியமான நடவடிக்கை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பவன் கல்யாண் வரவேற்பு:

தர்மத்தின் ஒளியை ஒருபோதும் மங்கச் செய்ய முடியாது என்றும், உண்மையும் நம்பிக்கையும் எப்போதும் தங்களுக்கான வழியை கண்டடையும் என்றும் பவன் கல்யாண் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை முழு மனதுடன் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத மரபுகளை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு:

கோயில்கள் நமது பழமையான நாகரிகத்தின் ஆன்மாவாக திகழ்கின்றன என்று குறிப்பிட்டுள்ள பவன் கல்யாண், பல தலைமுறைகளாக தொடரும் நம்பிக்கை, பக்தி மற்றும் புனித மரபுகளைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றப்படும் எந்தவொரு மரபுக்கும் உரிய மரியாதை மறுக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கறிஞர் சாய் தீபக்கிற்கு பாராட்டு :

இந்த விவகாரத்தில் சட்ட போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து, வலுவான வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர் சாய் தீபக்கிற்கும் பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “அரோகரா! அரோகரா! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என்று தனது பதிவை முடித்துள்ளார்.

=====================