சிங்கப்பெண் சிறப்பு படை
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தால் பெண்கள் மற்றும் குழந்தகளின் பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் படை உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் , தேர்தல் இறுதி முடிவுகளில் தவெக பெரும்பான்மையான இடங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது
நடைமுறைக்கு வந்த சிறப்பு படை
இந்த நிலையில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் முதலவ்ர் விஜய் , இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை தொடங்கி வைத்தார் ,இதில் படைக்கான ரோந்து வாகனத்தை இயக்கி, தொடக்க விழாவை தொடங்கி வைத்தார்
தேவைப்பட்டால் துப்பாக்கி வழங்கப்படும்
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையில் பணியாற்றும் காவலரக்ளுக்கு தேவைப்பட்டாக் துப்பாக்கி வழங்கப்படும் என்று இப்படையின் முதன்மை அதிகாரியான ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார் , மேலும் துப்பாகை இயக்கவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதகவும் , தெரிவித்துள்ளார்
இது குறித்து பேசிய ஐ.ஜி. பவானீஸ்வரி கூறியதாவது
இந்த சிறப்பு படை குறித்து பேசிய ஐ,ஜி கூறும்போது ,பெண்களுக்கு எதிரான குற்றங்களை துரிதமாகக் கையாள்வதும், ஆபத்து காலங்களில் விரைந்து செயல்பட்டு அவர்களைப் பாதுகாப்பதையே இந்த படை முதன்மையான நோக்கமாக கொண்டுள்ளதாகவும்
இதற்காக பொது இடங்கள், பேருந்து நிலையம், அலுவலகம் உட்பட பல இடங்களில் இந்த அதிரடிப்படை போலீஸார் ரோந்து செல்வர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கெல்லாம் நடந்துள்ளது அல்லது நடைபெறலாம் என்ற விவரத்தை சேகரித்து அந்த இடங்களில் மீண்டும் குற்றங்கள் நிகழாதவாறு நடவடிக்கை எடுக்க இந்த படை ட துரிதமாக செயல்படும் என்றும் தெரிவித்தார்
பெண்களுக்கு பாதுக்காப்பான நிலையை உருவாக்குவதே முதன்மை நோக்கம்
இந்த சிறப்பு அதிரடிப் படைக்காக ரூ.357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ,புதிதாக 2,545 போலீஸார் நியமிக்கப்பட உள்ளார்கள் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழகம் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பதே இதன் முக்கியமான நோக்கமாகும்
சமூக வலைதள குற்றங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை
பெண்களுக்கு எதிராக நிகழ் நேரங்களில் மட்டுமல்லாது , சமூக வளைதளம் மூலமாக் ஏற்படும் குற்றங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்டும் என்று தெரிவித்துள்ளார்
ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படும்
பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 49 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளதாகவும் . போலீஸார் நேரில் சென்று கண்காணிக்க முடியாத இடங்களில் இவை பயன்படுத்தப்படும்.
பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தவிர்த்து, அவர்கள் எந்த நேரத்திலும் அச்சமின்றி பயணிக்கவும், வாழவும் ஓர் உறுதியான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே இப்படையின் நோக்கம். என்று சிறப்புபடை செயல்பாடுகள் குறித்து தெரிவித்தார்
====================