முதற்கட்ட பயிற்சி வகுப்பு
TN Assembly Election 2026 Polling Booth : சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 28-ம் தேதி தொடங்கி நடைபெறும் என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 978 இடங்களில் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன .இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 19,594 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 16 மையங்களில் மார்ச் 28-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம்
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்படும் பகுதிகளாக ,தேர்தல் ஆணையர் கூறிய செய்தி குறிப்பில் பெரம்பூர் தொகுதிக்கு வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியிலும்,
கொளத்தூர் தொகுதிக்கு பந்தர் கார்டன் சென்னை உயர்நிலைப் பள்ளியிலும், ராயபுரம் தொகுதிக்கு மேற்கு மாதா சர்ச் சாலையில் உள்ள புனித பீட்டர் உயர்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ,
தவறாமல் பங்கெடுக்க வேண்டும் ஆணையர் அறிவிப்பு
இந்த பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மீறினால் தேர்தல் நடத்தை விதிகளின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்