ஒரு தேசம், ஒரு கனவுதான் நம் இலக்கு - ராம்நாத் கோவிந்த்!

Ramnath Kovind Speech in Tenkasi Visit : ஒரு தேசம், ஒரு கனவு என்ற சிந்தனை மிக முக்கியமானது என தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
Ramnath Kovind Speech in Tenkasi College Event
Ramnath Kovind Speech in Tenkasi College Event
1 min read

தனியார் நிகழ்ச்சியில் பேச்சு :

Ramnath Kovind Speech in Tenkasi College Event : ஒரு தேசம், ஒரு கனவு என்ற சிந்தனை மிக முக்கியமானது என தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில்(Vasudevanallur College) உள்ள தனியார் கல்லூரியில் வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை(Voice Of Tenkasi), ரோட்டரி சங்கம் சாா்பில் ஒரே தேசம்-ஒரே கனவு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பாஜக பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

ராம்நாத் கோவிந்த் சிறப்புரையாடல் :

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்(Ramnath Kovind Visit Tamil Nadu) மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்களால் நாம் அனைவரும் வேறுபட்டாலும் ஒரே கனவால் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என கூறினார். 2047ஆம் ஆண்டுக்குள் ஓர் அறிவாா்ந்த, வளமான, முன்னேறிய தேசத்தைக் கட்டமைப்பதே நமது அனைவரின் கனவு எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க : மத்திய அரசு திட்டங்களை "முடக்கும் திமுக" : நயினார் ஆவேசம்

மேலும், நம்மைச் சுற்றியுள்ள சவால்கள் சிறியவை அல்ல எனவும், சவால்களை சமாளிக்க நாம் ஒவ்வொருவரும் தனித்து குரல் கொடுக்கக் கூடாது என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், ஒரே தேசம்-ஒரே உறுதி- ஒரே இலக்கு என்பதை நோக்கி நாம் அனைவரும் பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in