Gold Price : உச்சத்தில் சென்ற தங்கம் விலையில் திடீர் மாற்றம்..!

Gold Price Peak 2025 Today Update : தங்கம் விலை கடந்த 18 நாட்களில் மட்டும் சவரனுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Gold Price Peak 2025 Today Update in Tamil
Gold Price Peak 2025 Today Update in Tamil
2 min read

18 நாட்களில் ரூ.6,000 உயர்வு :

Gold Price Peak 2025 Today Update in Tamil : தங்கம் விலை கடந்த 18 நாட்களில் மட்டும் சவரனுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை தொட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்ற நிலையை கடந்ததை அடுத்து அதன் பின்னரும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. கடந்த 9-ந்தேதி ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்தையும், கடந்த 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை அடுத்து நேற்று முன்தினம் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்தையும் தாண்டியது.

உச்சத்தில் தங்கம் விலை :

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், நேற்று தங்கத்தின் விலை முன்கூட்டி இருந்ததை காட்டிலும், இதுவரை இல்லாதது போல் உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.நேற்று முன்தினத்தை போலவே, நேற்றும் தங்கம் விலை காலை மற்றும் மாலையில் விலை மாற்றம் கண்டது. காலையில் சவரனுக்கு ரூ.560-ம், மாலையில் சவரனுக்கு ரூ.1,120-ம் அதிகரித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 430-க்கும், ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனையான தங்கம், நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனால், தங்கம் விலை விண்ணை முட்டிய நிலையில் கடந்த 5-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 18 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.775-ம், சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 200-ம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்திற்கு ஈடாக உயரும் வெள்ளி விலை:

தங்கத்திற்கு ஈடாக தங்கத்தை போல் வெள்ளி விலையும் கட்டுக்கடங்காமல் உச்சம் தொட்டு வருகிறது. நேற்று வெள்ளி விலையும் 2 முறை உயர்ந்து காணப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.150-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளியில் விலையில் ஏதும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : ரூ.84,000-ஐ தாண்டியது தங்கம் : வரலாறு காணாத உச்சம் தொட்டது

விலை உயர்வுக்கு காரணம்:

இந்த விலை மாற்றமானது அமெரிக்காவின் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்திருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும் முதலீட்டாளர்களின் கவனம் பெருமளவில் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாகவே தங்கம் விலை உயர்ந்து வருவதாக சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம் :

24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800 (இன்று)

23.09.2025 ஒரு சவரன் ரூ.85,120

22.09.2025 ஒரு சவரன் ரூ.83,240

21.09.2025 ஒரு சவரன் ரூ.82,320

20.09.2025 ஒரு சவரன் ரூ.82,320

19.09.2025 ஒரு சவரன் ரூ.81,840

=======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in