
தூய்மை பணியாளர்கள்ப போராட்டம்
Chennai Sanitation Workers Protest : சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி வழங்கியது. இதனை கண்டித்து உழைப்பவர் உரிமைக் இயக்கம் சார்பில் தூய்மைப் பணியளர்கள் மாநகராட்சி அலுவலமான ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் ஆதரவு :
பணிப் பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் நடத்திவரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அவர்களை சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்துவருகின்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி :
கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக நடைபெற்றுவரும் போராட்டத்தினை அடுத்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா(Mayor Priya Rajan) உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
தேங்கிக் கிடக்கும் குப்பைகள்
கடந்த 10 நாட்களுக்கு மேல் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் பகுதிகளின் பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன, அத்தோடு குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிவதால் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் நிலையில் சென்னையின் வீதிகள் காணப்படுகிறது.
மேலும் படிக்க : ’துப்பாக்கியை காட்டினாலும் பயமில்லை’ : தூய்மை பணியாளர்கள் உறுதி
இதன் காரணமாக ராயபுரம், திருவிக நகர் பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. சாலைகளில் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்வோர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய சென்னை மாநகராட்சியும், திமுக அரசும் பிடிவாத போக்குடன் நடந்து கொள்வதால், தூய்மை பணியாளர்கள் மட்டுமின்று பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
====