வெப்ப அலை வீசும்
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வழக்கத்தைவிட பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பாதை
வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் கிழக்கு உத்தரபிரதேசம் முதல் தென் தமிழகம் வரையில் விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து
மேற்கு தொடர்ச்சி மலை : மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்துள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
வெப்ப அலைக்கு வாய்ப்பு
வடக்கு மற்றும் கடலோர தமிழகத்தில் சில பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இயல்பைவிட அதிக வெப்பநிலையுடன் கூடிய வெப்பஅலை அதிக நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது
ஏப்ரல் மாதம் ,இயல்பை விட அதிகரிக்கும் வெப்ப நிலை
இந்த ஆண்டு ஏப்ரல் மதம் வெப்பநிலையானது இயல்பை விட மிக கடுமையாக வெப்ப அலையின் வீசும் என்றும் , இதனால் இரவு நேர குளிர்ச்சியும் குறையும்.
ஒட்டுமொத்தமாக இந்த ஏப்ரல் மாதம் வழக்கத்தை விட அதிக வெப்பம் தகிக்கும் மாதமாக இருக்கும். மழை இடையிடையே பெய்தாலும் வெப்பத்தால் ஏற்படும் அசவுகரியங்கள் நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது