வாக்காளர் திருத்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா : செக் பண்ணுங்க!

SIR Form Online Submitted Status in ECI Portal : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடையும் தருவாயை நெருங்கியுள்ள நிலையில், பட்டியலில் பெயர் உள்ளதா என எளிதாக சரிபார்க்க முடியும்.
How to check SIR Form Fill Up Online Submitted BLO has Updated SIR Enumeration Form 2026 Tamil Nadu on ECI Portal
How to check SIR Form Fill Up Online Submitted BLO has Updated SIR Enumeration Form 2026 Tamil Nadu on ECI PortalGoogle
1 min read

வாக்காளர் திருத்த பணி தீவிரம்

SIR Form Online Submitted Status in ECI Portal : இந்தியா முழுவதிலும் தேர்தல் ஆணையத்தின் கீழ் வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் BLOக்கள் இந்த கணக்கீட்டு படிவத்தினை நமக்கு வழங்குகின்றனர். அதனை பூர்த்தி செய்து ஒரு படிவத்தினை BLOவிற்கும் மற்றொரு படிவத்தினை நாமும் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஓடிபி உள்ளீடு செய்யுங்கள்

நாம் படிவத்தினை வழங்கிய பிறகு நமது படிவம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட voters.eci.gov.in/login என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். பெயர், செல்போன் எண், கொடுத்து சைன்-அப் (Sign-Up) செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

படிவத்தை சம்மிட் செய்யவில்லை

பின்னர், எஸ்ஐஆர் 2026 பகுதியில் உள்ள Fill Enumeration Form என்ற பகுதிக்குச் சென்று கிளிக் செய்து இதில், வாக்காளரின் மாநிலம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் எண் கேட்கப்படும். அவற்றைக் கொடுக்க வேண்டும்.

நீங்கள் கொடுத்த விவரம் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தால், ''Submitted'' என்று காட்டும். அப்படி இல்லாமல், "ஆதார் படிவத்தை சமர்ப்பிக்கவும்" என்று காட்டினால், வாக்குச்சாவடி நிலை அலுவலர் உங்கள் படிவத்தை இன்னும் சப்மிட் செய்யவில்லை என்று பொருள்.

நமது பெயர் சேர்க்கப்பட்டதை தெரிந்கொள்ளலாம்

இந்த படிவத்தில் Login ஆகவில்லை என்றால் Signup என்ற இடத்திற்கு சென்று நமது தொலைபேசி எண்ணை பதிவு செய்து கேப்சாவை பதிவு செய்தால் ஓடிபி வரும். அதனை பதிவிட்டு விட்டால் மீண்டும் முகப்பு பக்கத்தில் Login ஆகும். அதன் பிறகு நமது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

வாக்குச்சாவடி அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியா முழுவதும் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை வீட்டில் இருந்தபடியே எளிமையான முறையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஏதேனும் விவரங்கள் தேவைப்படும் எனில் வாக்குச்சாவடி அலுவலர்களை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இதனால் எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்பித்தவர்கள் முறையாக கையாளப்படுகிறதா என்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in