வானிலை அப்டேட் : இனி வெயில் வெளுத்து வாங்க போகுது

IMD Weather Forecast Update in Tamil Nadu : தமிழகத்தை பல மாதமாக பனி வாட்டி வந்த நிலையில் ,அது குறைந்து இனி தமிழகத்தில் வெயில் படிப்படியாக உயரும் என்று வானிலை தெரிவித்துள்ளது.
IMD Weather Forecast Update 2026 Temperatures will gradually rise in Tamil Nadu from Today Chennai RMC Weather Prediction in Tamil
IMD Weather Forecast Update 2026 Temperatures will gradually rise in Tamil Nadu from Today Chennai RMC Weather Prediction in TamilSource : IMD - Twitter
1 min read

வானிலை நிலவரம்

IMD Weather Forecast Update in Tamil Nadu : தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையாக 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

வறண்ட வானிலை

வறண்ட வானிலை குறித்து தெரிவித்துள்ள வானிலை மையமானது தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது .

அதிகாலை பனிமூட்டம்

நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகம், வரும் 12, 13 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது .

இயல்பை விட அதிகமான வெப்பம்

இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையாக 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்

தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் ஆகையால், இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in