

மையம் கொண்ட டிட்வா புயல்
India Meteorological Department Report on Low Pressure formed in Bay Of Bengal : நவம்பர் மாதம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில், மழை பெய்ய தொடங்கி தீபாவளியை ஒட்டி கனமழையாக உருவெடுத்தது. தமிழகத்தை தாண்டி, மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களிலும் மழை தொடர்ந்து பெய்தது. ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக வலுப்பெற்று டிட்வா எனப் பெயரிடப்பட்டது.
இரண்டு நாட்கள் மையம் கொண்ட புயல், பின்னர் வலுவிழந்து கரையை கடந்தது. டிட்வா புயலால் இலங்கை உள்ளிட்ட நகரங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது.
பின்னர் மழை குறைந்து தற்போது புயல் மையம் கொண்ட இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது, மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தை தொடங்கியுள்ளனர்.
வானிலை மையம் அறிக்கை
இதைத்தொடர்ந்து தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், சில இடங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் பனிமூட்டம்்
மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில், வரும் 9ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், இன்றும் நாளையும், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும்.
9ம் தேதி மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் சில இடங்களில் உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10ம் தேதியும் மழை பெய்யும்
ஜனவரி 10ம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
----