பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் - குஷியில் பொதுமக்கள்!

Diwali Special Trains 2025: இந்த ஆண்டு தொடங்கவுள்ள தீபாவளி, சாத் பண்டிகைக்காக அக்.1 முதல் 12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூடுதலாக 3 கோடி பேர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Railways plans to operate around 12 000 special trains for Diwali and Chhath Pooja Festivals 2025 in Tamil
Indian Railways plans to operate around 12 000 special trains for Diwali and Chhath Pooja Festivals 2025 in Tamil
1 min read

Diwali Special Trains 2025 : இந்தியா மற்றும் தமிழகத்தில் பொதுவாக பண்டிகைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்நாட்களில் பொது போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து வாகனங்களும் அதிகரிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு தொடங்கவுள்ள தீபாவளி, சாத் பண்டிகைக்காக அக்.1 முதல் 12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூடுதலாக 3 கோடி பேர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கருத்து :

இதுகுறித்து பேசிய ரயில்வே அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் தீபாவளி(Diwali 2025) மற்​றும் சாத் பண்​டிகை(Chhath Puja 2025) காலத்​தில் ரயில்​களில் கூட்ட நெரிசலை குறைப்​ப​தற்​காக சுமார் 12 ஆயிரம் சிறப்பு ரயில்​களை(Special Trains) ரயில்வே இயக்க உள்​ளது. இதன் மூலம் கூடு​தலாக 3 கோடி பேர் பயணம் செய்​ய​லாம் என்றும் இது, ஆஸ்​திரேலி​யா​வின் மக்​கள் தொகையை விட அதி​க​மாகும் என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

மேலும், இந்த சிறப்பு ரயில்​கள் அக்​டோபர் 1 முதல் 45 நாட்​களுக்​கும் மேலாக இயக்​கப்​படும்(Diwali Train Ticket Booking Date) என்று தெரிவித்த அவர், இவை தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்​ப​திவு தேவை​யில்​லாத முற்​றி​லும் பொதுப் பெட்​டிகளை கொண்ட 150 ரயில்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​படும், செப்​டம்​பர் 23-ம் தேதி செவ்​வாய்க்​கிழமை வரை 10,000 சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​ பட்​டுள்​ள நிலையில், தேவை​யின் அடிப்​படை​யில் படிப்​படி​யாக கூடு​தல் ரயில்​கள் அறிவிக்​கப்​படும் என்று கூறினார். 70 ரயில்வே கோட்​டங்​களில் 29-ல் 90 சதவீதத்​திற்கு மேல் நேரம் தவறாமை எட்​டப்​பட்​டுள்​ளது. வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயில் தயார் நிலை​யில் உள்​ளது என்றும் இதன் மற்​றொரு ரயில் அக்​டோபர் 15-ம் தேதிக்​குள் வந்து விடும். அதன் பிறகே வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயில் அறி​முகப்​படுத்​தப்​படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : ஆயுத பூஜை, தீபாவளிக்கு “ சிறப்பு ரயில்கள்” : முன்பதிவு தொடக்கம்

கடந்த ஆண்டு ரயில் இயக்கம்

கூடு​தலாக 1.5 கோடி பேர் பயணிக்​கும் வகை​யில்​ கடந்த ஆண்டு பண்​டிகை காலத்​தில் 7,724 சிறப்பு ரயில்​களை ரயில்வே இயக்​கியது என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in