”உதவி பேராசிரியர் தேர்வு முறைக்கேடு” விவகாரம் : உரிய விசாரணை நடத்த வேண்டும் : தலைவர்கள் வலியுறுத்தல்...!

கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் எடப்பாடி பழனிசாமி , திருமாவளவன் , அன்புமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
Irregularities in Assistant Professor recruitment: Leaders urge for a proper inquiry.
Irregularities in Assistant Professor recruitment: Leaders urge for a proper inquiry. google
2 min read

உதவி பேராசிரியர் பணி நியமன முறைக்கேடு

ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது.

அத்தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இம்முடிவுகள், தேர்வு எழுதியவர்களில் ஏராளமானவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன.

தேர்வு முறைக்கேடு உரிய விசாரணை

ந்டந்து முடிந்த கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்

விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை

இத்தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, தமிழ் -முதல் தாளில் ஒருவர் 150-க்கு 111 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அதே நபர் தமிழ் -இரண்டாம் தாளில் 50க்கு பூஜ்ஜியம் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொருவர் தமிழ்-முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இது போல பலருக்கு நடந்துள்ளது. பூஜ்யம் மட்டுமே வாங்கும் அளவுக்கா தேர்வு எழுதக் கூடியவர்களின் தகுதி இருக்கும்? முனைவர் பட்டம் பெற்றவர்களா பூஜ்யம் பெறும் நிலையில் தேர்வு எழுதி இருப்பார்கள்? இது நம்பக்கூடிய ஒன்றாக இல்லை.

எனவே, தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்கிற வலுவான அய்யத்தை உருவாக்கியுள்ளது. இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை வைத்து பல்லாயிரக்கணக்கானோர் எழுதியுள்ளனர். அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன.

எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்திட அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

விளக்கக் கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

புறநிலை வினாத்தாளில் அதிக மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள், விளக்கக் கட்டுரைப் பிரிவு தேர்வில் 42 தேர்வர்கள் ‘0’ மதிப்பெண்ணும் மற்றும் 106 தேர்வர்கள் ஒரு மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, புறநிலை வினாத்தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்ற தமிழ் பிரிவைச் சேர்ந்த ஒரு தேர்வருக்கு, கட்டுரைத் தாளில் பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. என்ற குறளை நினைவுபடுத்துவதுடன், தகுதியான தேர்வர்களை நீக்கிவிட்டு, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குச் சாதகமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இது குறித்து சுதந்திரமான முழு விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவேண்டுமென்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.’ எனத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

உதவிப் பேராசிரியர்கள் தேர்வில் சிலரது மதிப்பெண்களில் மட்டும் வண்ண அடையாளம் ஏன்? புதிது புதிதாக வெளிவரும் சர்ச்சைகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக்குகளுக்கு விரிவிரையாளர்களை தேர்வு செய்வதில் 2017-ஆம் ஆண்டில் நடந்த முறைகேடுகளையும், அது தொடர்பாக இப்போதும் விசாரணை நடத்தப்பட்டு வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.

தவறான காரணங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் மீதான நன்னம்பிக்கையையும், நன் மதிப்பையும் இழந்து வருகிறது. உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக அடுத்தடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்

அதிர்ச்சியில் தேர்வர்கள்

நடந்து முடிந்த தேர்விற்கு பிறகு , முடிவுகள் வெளியான பிறகு அதில் பல சிக்கல்கள் குளறுபடிகள் நடந்திருக்கும் நிலையில் , தேர்வெழுதியவர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளன்ர் . குறிப்பாக முடிவுகள் வெளியான பிறகும் விடைகுறிப்பு{ answer key } வெளிவரததாலும் தேர்வர்கள் அதிர்சியில் உள்ளனர்.

===============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in