

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மும்முரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இரண்டு தொகுதியில் விஜய் போட்டி
முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டிடுகிறார்.
இரண்டு தொகுதியில் வேட்புமனுத்தாக்கல்
இதற்காக கடந்த வாரம் சென்னை பெரம்பூரில் வேட்புமனுத்தாக்கல் செய்த விஜய் நேற்று திருச்சி கிழக்கு தொகுதியிலும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு
இந்நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகளின் படி வேட்பாளர் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் உண்மைத் தகவல்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
தன்டணைக்குறிய குற்றம்
அதற்கு மாறாக வேட்பாளர் தவறான தகவல்களை சமர்ப்பிப்பது அல்லது உண்மை தகவல்களை மறைத்து மனுத்தால்க்கல் செய்வது தன்டணைக்குறிய குற்றம். அதனால் வேட்பாளரின் மனுத்தாக்கல் நிராகரிப்படும் வாய்ப்புள்ளது.
வழக்குகள் இல்லை | ஒரு வழக்கு உள்ளது | குளறுபடி
ஏற்கெனவே பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீது எந்த விதமான வழக்கும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த மனுத்தாக்கலில் அதற்கு மாறாக, தன் மீது 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடலாம். ஆனால் அந்த வேட்பாளர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் சரியானதாகவும் , ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
முரணான தகவல்
இதன் அடிப்படையில் பார்க்கும் போது தவெக தலைவர் விஜய் சமர்ப்பித்துள்ள வேட்புமனுவில் முரணான தகவல் இடம்பெற்று உள்ளது. இதனால் விஜயின் வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு
எனினும் இன்னும் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடையாததால் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் தவெக தலைவர் விஜய் திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை மீண்டும் சமர்ப்பித்தால் வேட்புமனு நிராகரிக்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.
விஜயின் வேட்புமனு நிராகரிக்கப்படுமா? ஏப்ரல் 7-ல் விடை
விஜய் திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வாரா இல்லையா? அல்லது விஜயின் வேட்புமனு நிராகரிக்கப்படுமா? ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது வேட்புமனு பரிசீலனை நடைபெறும் ஏப்ரல் 7 ஆம் தேதி தான் தெரியவரும்.