
Sengottaiyan Delhi Visit : அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும், அவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும். 10 நாள்களுக்குள் இது நடக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 5 ஆம் தேதி செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.
அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கட்சியின் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத செங்கோட்டையன் டெல்லி செல்ல திட்டமிட்டார். மன அமைதிக்காக ஹரித்துவார் செல்லவிருப்பதாக செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதனிடையே நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில் இன்று மதியம் டெல்லியிலிருந்து செங்கோட்டையன் கோவை திரும்பினார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கூறியதாவது(Sengottaiyan Press Meet): ஹரித்துவார் செல்வதாக சொல்லி இருந்தேன். டெல்லி சென்ற உடன் எனக்கு உள்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கிடைத்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினேன். தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து அங்கு கருத்துகள் பரிமாறப்பட்டன. அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலுமைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கருத்துகளை எடுத்துக் கூறினேன். அதனடிப்படையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க : ADMK: அதிமுகவில் இருந்து ’செங்கோட்டையன் நீக்கம்’ : எடப்பாடி அதிரடி
ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப கருத்துகளை தெரிவித்து வருகின்ற இந்நேரத்தில், ஜனநாயகரீதியில் அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு ரயில்வேதுறை அமைச்சர் வருகை தந்தார். ஈரோட்டில் இருந்து புறப்படும் ஏற்காடு ரயிலின் நேரத்தை மாற்றிமைக்க அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரும் பரிசீலிப்பதாக கூறினார்.
மக்கள் பணி செய்வதற்கு, இயக்கம் வலுபெறுவதற்கு தொடர்ந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு செங்கோட்டையன்(Sengottaiyan Full Speech) கூறினார்.