
போதைப்பொருள் பயப்படுத்தியது தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் குழுவில் இருந்த அவரது நண்பர்கள் யார் யார் என்ற பட்டியலை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த வாட்ஸ்அப் குழுவில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவரது கல்லூரி கால நண்பர்கள் என 10க்கும் மேற்பட்டோர் உள்ளதாகவும் இவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த குழுவில் இருந்தவர்கள் பலமுறை பார்ட்டிகளில் கலந்து கொண்டதாகவும் எந்த இடத்தில் எந்த நேரத்தில் பார்ட்டி நடக்கும் போன்ற தகவல்களை இந்த குழுவில் பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணாவின் திரைத்துறை மற்றும் கல்லூரி கால நண்பர்களைத் தனித்தனியாக அழைத்து விசாரிக்க சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணாவிற்கு ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுகிறது.