BJP Ex Leader Annamalai Criticized Thirumavalavan Car Accident Attack And TRB Rajaa Foxconn
BJP Ex Leader Annamalai Criticized Thirumavalavan Car Accident Attack And TRB Rajaa Foxconn

Annamalai : திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வரவேண்டும்- அண்ணாமலை!

Annamalai on Thirumavalavan : வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Published on

அண்ணாமலை சந்திப்பு

Annamalai on Thirumavalavan : கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை , திருமாவளவன் கார் டூவிலரை இடிப்பது வீடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது, அந்த நபருக்கு பின்னால் நான் இருப்பதாக திருமாவளவன் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு அடி அடித்தால் நான் இரண்டு அடி அடிக்கும் ஆள்

உருட்டல் மிரட்டல் எல்லாம் தன்னிடம் வேண்டாம் என்றும், ஒரு அடி அடித்தால் தான் இரண்டு அடி அடிக்கும் ஆள் என்றும் அவர் கூறினார். போலீசில் இருந்து பல ரவுடிகளை பார்த்து வந்தவன் நான். இந்த வேலை எல்லாம் தன்னிடம் வைத்து கொள்ளாதீர்கள் என்றும், இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்தார்.

நாகரீக அரசியலுக்கு வர வேண்டும்

திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்றும், வன்முறை அரசியலால் யாருக்கு லாபம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை முதலமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது, ஃபாக்ஸ்கான் காரர்களுக்கு தமிழ் தெரியாது, அந்த ரூம்ல உக்காந்து எண்ண பேசுணாங்கணு எனக்கும் தெரியாது உங்களுக்கும் தெரியாது என்று கூறிய அவர், டி. ஆர். பி. ராஜா அண்ணன் என்றும் அவர் 15 ஆயிரம் கோடி, 14 ஆயிரம் வேலைவாய்ப்பு(TRB Rajaa Foxconn Employment) என்று கூறியுள்ளதாகவும், பாக்ஸ்கான் அவரை பார்க்க வரவில்லை என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க : கூட்டணிக்கு ஆள் தேடுகிறார் எடப்பாடி : முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

முதலமைச்சர ஏமாத்துற டி.ஆர்.பி.ராஜா

ஃபாக்ஸ்கான் நிறுவனம் இன்று உண்மையை பேசிய பிறகு, தமிழக அரசுக்கு பிரச்சனை என்று கூறிய அண்ணாமலை அவர்கள்(Annamalai on TRB Rajaa Foxconn), அண்ணன் டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர நல்ல ஏமாத்துறாரு என்று விமர்சித்துள்ளார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in