”மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள்,வெற்றி உங்களைத் தேடி வரும்”மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் மாவர்களுக்கு முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Learn happily, success will come your way! First of all, Vijay wishes students school after the holidays,
Learn happily, success will come your way! First of all, Vijay wishes students school after the holidays, google
1 min read

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு ‘

கடந்த மாதம் விடப்பட்ட கோடை விடுமுறையானது நிறைவுப்பெற்று அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன , இந்த நிலையில் முதல் நாள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்

இது குறித்து முதல்வர் விஜய் தெரிவித்துள்ளதாவது

இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.

மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!

என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

அடிப்படையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் ஏற்பாடு

ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வசதியாக பள்ளிகளில் அனைத்து அடிபடையான வசதிகளையும் செய்து தர ஏற்பாடு செய்யபட்டுள்ளது ,

குறிப்பாக வளாக தூய்மை , கழிப்பறை வசதி , தண்ணீர் வசதி , மற்றும் புத்தகங்கள் , சீருடைகளையும் முறையாக வழங்க ஏற்பாடானது செய்யப்பட்டுள்ளது

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in