காவலாளி அஜித் குமார் மரணம், மனம் பதறுகிறது நீதிபதி கருத்து

Sivagangai Ajith Kumar Case Details in Tamil : ஒன்றுமில்லாத காரணத்திற்கு ஒரு உயிர் பறிபோவதை ஏற்று கொள்ள முடியாது, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க படும் என நீதிபதி வேதனை.
Madurai High Court Judge Hearing Sivagangai Thiruppuvanam Temple Security Guard Ajith Kumar Custodial Death Case Details in Tamil
Madurai High Court Judge Hearing Sivagangai Thiruppuvanam Temple Security Guard Ajith Kumar Custodial Death Case Details in TamilSource : Google Images
1 min read

Sivagangai Ajith Kumar Case Details in Tamil : ஒன்றுமில்லாத காரணத்திற்கு ஒரு உயிர் பறிபோவதை ஏற்று கொள்ள முடியாது ,குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க படும் என நீதிபதி வேதனை .

யார் இந்த அஜித் குமார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தவர் .

புகார் பின்னணி

அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

முதல் தரப்பு விசாரணை

காவலாளி அஜித் குமாருக்கு எதிராக நகையை காணவில்லை என மனுதாரர் நிகிதா அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியிருந்தது. இதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கும் அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர்கள் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், ஜூலை 8ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வந்தார்.

நீதிபதி சரமாரி கேள்வி

இதனை தொடர்ந்து நீதிபதி கூறுகையில்,

புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே; அவர்தானே எல்லாவற்றிற்கும் காரணம். ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? என சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளார் .

நீதிபதி வேதனை கருத்து

ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்தே கொலை செய்துவிட்டன ஏதும் இல்லாத விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்.

காவல்துறையின் செயலை பார்த்தால் மனமே பதறுகிறது என வேதனையுடன் கூறினார் .

சரியான பாடம் புகட்டுவேன்

அஜித்குமார் மரண வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். காவல்துறையினருக் பாடம் புகட்ட வேண்டும் என கூறி விசாரணையை பிப்.17க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in