மேகேதாட்டு விவகாரம் : அரசு இதுவரை என்ன செய்துள்ளது : அனைத்து கட்சி கூட்டம் என்ன தயக்கம், உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!

சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
Mekedatu issue: What has the ruling government done so far? Opposition questions during the budget speech.
Mekedatu issue: What has the ruling government done so far? Opposition questions during the budget speech. google
1 min read

பட்ஜெட் தாக்கல் மீதான கவன ஈர்ப்பு விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் பொது பபட்ஜெட் மற்றும் , வேளாண் பட்ஜெட் மீதான கவன ஈர்ப்பு விவாதத்தின் உரையானது சட்டப்பேரவையில் நடைபெற்றது.

அதில் மேகேதாட்டு அணை விகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுன் என் வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் தீர்மானத்தை கொண்டு வந்து கவன ஈர்ப்பு உரையை நிகழ்த்தினார்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி

சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி கூறும்போது டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடிக்காகத்தான் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு அரைகுறை தள்ளுபடி செய்தது ஏன்? முழு பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி என்ன ஆனது?

பயிர்க்கடனை எப்போது முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிய தேர்தக் வாக்குறுதி எங்கே என்று கேள்விஎழுப்பியுள்ளார்

மேகேதாட்டு விவகாரம், அனைத்து கட்சி கூட்டத்தை எப்போது கூட்டுவீர்கள் ?

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டத்தை எப்போது கூட்டுவீர்கள் என்று கேட்டுள்ளார், குறிப்பாக இதுவரை மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது?

மேகதாது விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் டெல்லி சென்று வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தியிருந்தோம்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை எப்போது கூட்டுவீர்கள்? மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு அமைந்த பிறகு இதுவரை இல்லாத வேகத்தில் கர்நாடக அரசு செயல்பட்டுவருகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட தமிழ்நாடு அரசு மறுக்கிறது அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்

முதலமைச்சர் காவிரி விவகாரத்தில் என்ன செய்ய இருக்கிறார் , ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மறுப்பதற்கான காரணத்தை விளக்குங்கள்

முதலமைச்சர் கர்நாடகா செல்வதாக வேளாண் அமைச்சர் கூறுகிறார் , இன்னொரு அமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள் , இதை வைத்து பார்த்தால் முதலமைச்சர் விஜய் கர்நாடக செல்வதாக இருந்தாரா? மேகதாது விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. முதலமைச்சர் பேச்சைத்தான் இங்கு கூறுகிறேன், அதை குறித்தான விளக்கம் வேண்டும் என்று கோரியுள்ளார்

மேலும் தொடர்து பேசிய அமைச்சர் ,என்னுடைய கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறீர்கள் எனபது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது என்று அதை குறித்தான விளக்கம் இங்கு வேண்டும் தெரிவித்திருக்கிறார்

==========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in