

பாரதியார் பிறந்தநாள் கொண்டாட்டம்
bharathiyar birthday modi tweet தமிழில் புலமை மட்டும் தமிழை தனது கவிமூலம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, அனைத்து மக்களும் பறைசாற்றும் அளவிற்கு எடுத்து சென்றவர் மகாகவி பாரதியார். இவரின் கவிதை மற்றும் பாடல்களின் மூலம் இந்திய மக்களை எழுச்சிபூர்வமாக தட்டி எழுப்பி, விடுதலை உணர்வு ஊட்டினார்.
இன்றைய இந்திய விடுதலைக்கு இவரின் பங்கு அளப்பரியது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சின்னச்சாமி ஐய்யருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பதினொராவாது மகனாக 11. 12.1882 ஆம் ஆண்டு பிறந்தார் பாராதியார். இவரின் ஒவ்வொரு பிறந்தநாளை தமிழ் மக்கள் மட்டுமல்லாது, உலகளவில் உள்ள அனைத்து இந்திய மக்களும் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் மோடி மரியாதை
2025 ஆம் ஆண்டான பாரதியின் 143வது பிறந்த நாளை உலக மக்கள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், இவரின் திருவுருவபடத்திற்கும், சிலைக்கும், அரசியல் தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை மலர் தூவி மரியாதை செலுத்தி நினைவு கூர்ந்து வருகின்றனர். இவருக்கு இந்திய பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன.
இந்தியாவின் கலாசார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் வெளியிட்ட அறிக்கையில், நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பியான சுப்பிரமணிய பாரதியின் ஜெயந்தி தினத்தில் அவருக்கு வணக்கங்கள். காலனித்துவ அரசால் செய்யப்பட்ட அட்டூழியங்களை துணிந்து எதிர்த்தார். மகாகவி புரட்சியின் சுடரை ஏந்தி, தனது அக்னி போன்ற தேசபக்தி நிறைந்த கவிதைகளால் சுதந்திர வேட்கையை தூண்டினார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அதே நேரத்தில், சமூக சீர்திருத்தங்கள் மூலம் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் நாகரிக இலக்கை அவர் முன்னெடுத்தார். அவரது ஞானம் உத்வேகத்தின் நித்திய ஊற்றாக இருக்கும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.