

தேமுதிகவின் 22-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டுச் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடியேற்றி தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தேமுதிகவின் பொன்னான நாள்
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, "தேமுதிகவின் 22-ஆம் ஆண்டு தொடக்க விழா என்பது கட்சிக்கு ஒரு பொன்னான நாள். இதனைத் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
கேப்டனின் லட்சியத்திற்காக இணைந்து நிற்கும் தொண்டர்கள்
கேப்டன் எந்த லட்சியத்திற்காக இக்கட்சியைத் தொடங்கினாரோ, அந்தக் கனவைத் தொண்டர்களுடன் இணைந்து வென்றெடுப்போம். இந்த ஆண்டு தேமுதிக தொடக்க நாள் விநாயகர் சதுர்த்தியுடன் இணைந்து வந்துள்ளது சிறப்பானது" எனக் கூறினார்.
திமுக கூட்டணி குறித்து தெளிவு
வரும் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு "அது அவர்களின் கட்சியின் தனிப்பட்ட நிலைப்பாடு என்றார்.
திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம். தேமுதிக தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் இருக்கும், இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளுக்கும் எங்களின் முழு ஆதரவு இருக்கும்" என்று தெரிவித்தார்.
திருமாவளவன் விமர்சனத்திற்குப் பதில்
"திமுக கூட்டணியில் நீண்ட நாட்களாக இருந்த எங்களை விட, புதிதாக வந்த தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டன" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வைத்த விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதற்குப் பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், "இந்த கேள்வி உட்படப் பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்களுக்கு வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு விரிவாகப் பதிலளிக்கிறேன்" எனக் கூறினார்.
======