அறுபடைவீடுகளை காசுகொடுக்காமல் தரிசனம் செய்ய முடியுமா ? அண்ணாமலை

மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை மக்கள் அமைதியாக தரிசித்துச் செல்கின்றனர். அறுபடை வீடுகளில் காசு கொடுக்காமல் தரிசிக்க முடியாது என்று அண்ணாமலை பேசினார்.
அறுபடைவீடுகளை காசுகொடுக்காமல் தரிசனம் செய்ய  முடியுமா ? அண்ணாமலை
https://x.com/annamalai_k
1 min read

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: இது அரசியல் மாநாடு அல்ல. நமது வாக்கைப் பெற்று அதிகாரத்தில் இருப்போர், கோயில்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்றனர். முதல் படை வீடான திருப்பரங்குன்றத்துக்கே இடையூறு செய்தனர். அடுத்தடுத்த வீடுகளுக்கும் இடையூறு செய்வார்கள். நமது முன்னோர் பாதுகாத்துக் கொடுத்துள்ளதை நாம் பாதுகாக்க வேண்டும்.

மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை மக்கள் அமைதியாக தரிசித்துச் செல்கின்றனர். அறுபடை வீடுகளில் காசு கொடுக்காமல் தரிசிக்க முடியாது.

இந்து மதத்தினருக்கு ஒன்று, இந்து மதம் சாராத ஒருவருக்கு ஒன்று என்று தமிழ்நாட்டில் எதற்காக இரண்டு சட்டங்கள்?

பணம் இருப்பவருக்கு ஒரு மாதிரி, பிறருக்கு ஒரு மாதிரி என்று அறநிலையத் துறைக்கு கீழ் இருக்கும் 40,000 கோவில்கள் நடந்துகொண்டிருக்கின்றது.எங்காவது ஓரிடத்தில் அறநிலையத் துறையின் செயல்பாடு நேர்மையாக இருக்கிறதா?

நமது கலாச்சாரச் சின்னம் அழியக்கூடாது; மதம் மாறக் கூடாது. கந்த சஷ்டி கவசப் பாடல், சக்தியைக் கொடுக்கும். நமது பண்டைய கலாச்சாரம், பண்பாடுகளைத் தேடிப் படிக்க வேண்டும். யாருக்கும் நாம் எதிரிகள் அல்ல. திருப்பரங்குன்றத்தில் ஒரு தலைவர் சுவாமி கும்பிட்டபோது, நெற்றியில் பூசிய திருநீறை அழித்துவிட்டு, ஒரு பெண் பக்தருடன் செல்ஃபி எடுத்தார். நாளை அவர் உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவார். அப்போது அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதுரை முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒருங்கிணைத்து உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in