Egg Rate : உச்சம் தொட்ட முட்டை விலை- முட்டை பிரியர்கள் அதிருப்தி!

Namakkal Egg Rate Today : நாமக்கல்லில், முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. குளிர்காலத்தில் நுகர்வு அதிகரித்ததால், ஒரு முட்டை விலை 6 ரூபாய் 15 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Namakkal Wholesale Egg Rate Today Has Reached New Hike Of Rupees 6. 15 Per Egg in Namakkal Latest News in Tamil
Namakkal Wholesale Egg Rate Today Has Reached New Hike Of Rupees 6. 15 Per Egg in Namakkal Latest News in TamilGoogle
1 min read

முட்டை விலை அதிகரிப்பு என தேசிய ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

Namakkal Egg Rate Today : முட்டை விலை தொடர்ந்து கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. அதிலும் முட்டைக்கு பெயர் போன நாமக்கல்லில் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அதிகப்படியாக நாமக்கல்லில் இருந்து வெளிவூர்களுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

முட்டை விலையை உயர்த்திய தேசிய ஒருங்கிணைப்பு குழு

தற்போது குளிர்காலம் என்பதால், முட்டை உபயோகம் அதிகமாகியுள்ளது. உற்பத்தியும் கம்மியாக உள்ள நிலையில், கடந்த 22 நாட்களாக ரூ 6.10 காசுகளாக இருந்த முட்டை விலை தற்போது 5 பைசா உயர்ந்து ரூபாய் 6.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களின் விலை உயர்வு, உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு, குளிர்காலம் என்பதால் வடமாநிலங்களுக்கு செல்லும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகம், மேலும் குளிர்காலம் என்பதால் முட்டைகளை அதிக விரும்பி சாப்பிடும் எண்ணிக்கை அதிகம் உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த முட்டை விலையை அறிவித்துள்ளது.

நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள்

நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை, 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

குளிர்காலத்திற்கு பிறகு முட்டை விலை குறையுமா

ஒரு முட்டை ரூ.6.15 விற்பனை செய்யப்படும் நிலையில், நாமக்கல் மண்டலத்தில் 55 ஆண்டுகால பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து உயர்ந்துவருவது, மிகுந்த வேதனை அளிப்பதாக உணவு பிரியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர், மேலும், குளிர்காலத்தையொட்டி இந்த நிலை ஏற்பட்டுள்ளதால் குளிர்காலம் முடிவடைந்த பிறகு இதன் விலையில் மாற்றம் ஏற்றபட்டு குறையும் என்று நம்புவதாக நுகர்வோர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளிவருகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in