

Name removed from voter list: Actor Prakash Raj releases video expressing dissatisfaction!
வாக்காளர் உரிமையை இழந்த பிரகாஷ் ராஜ்
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (SIR) பிறகு, கர்நாடக மாநிலம் பெங்களூரு தொகுதியில் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
பிறந்த மண்ணில் வாக்குரிமை பறிப்பு
தான் பிறந்து, வளர்ந்து, கல்வி பயின்று, எம்.பி வேட்பாளராகப் போட்டியிட்ட அதே பெங்களூரு தொகுதியிலேயே தனது பெயர் நீக்கப்பட்டுள்ளது வேடிக்கையான விஷயம்.
இது நல்ல ஜோக் தானே
பெங்களூரில் வாக்காலர் உரிமையை இழந்த 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன் . இது நல்ல ஜோக் தானே என சமூக வலைத்தள வீடியோவில் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி
வாக்காளர் உரிமையை மீண்டும் பெற என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை தான் தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரிகளுக்கு பிரகாஷ் ராஜ் சவால்
ஆதரவளிக்காத குடிமக்களின் வாக்குரிமையை நீங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பறிக்கலாம், ஆனால் பதவியிலிருந்து இறக்கும் மக்களின் சக்தியை யாராலும் தடுக்க முடியாது என பிரகாஷ் ராஜ் அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரமடைவு
கர்நாடகாவில் ஆகஸ்ட் 17-க்குள் எஸ்ஐஆர் பணிகளை முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 24 ஆம் தேதியிலும் , இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27 ஆம் தேதியிலும் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ”தமிழர்கள் நாடு திரும்பலாம்” : குடியேற்ற விதிகளை எளிமையாக்கிய இலங்கை : தமிழகத்தில் உள்ள 89,000 பேருக்கு வாய்ப்பு...!
======